அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளரா?

Updated : ஏப் 16, 2012 | Added : ஏப் 14, 2012 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அக்கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள 25 பேரின் பட்டியல், முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தனது கட்சி போட்டியிடலாமா அல்லது பொதுவேட்பாளரை நிறுத்தி, லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடலாமா? என்ற விசித்திரமான தேர்தல் குழப்பம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. பொது

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அக்கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள 25 பேரின் பட்டியல், முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தனது கட்சி போட்டியிடலாமா அல்லது பொதுவேட்பாளரை நிறுத்தி, லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடலாமா? என்ற விசித்திரமான தேர்தல் குழப்பம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. பொது வேட்பாளர் முடிவுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றால், இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., ம.தி.மு.க., உட்பட ஐந்து முனைப் போட்டி உருவாகும் வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியினர் தேர்தல் பணியை உற்சாகமாக துவக்கிவிட்டனர். அக்கட்சியின் அதிர்ஷ்டம் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதாலும் புதுக்கோட்டை தொகுதிக்கு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி மேம்பாட்டுக்கு 50 கோடி ரூபாய் சிறப்பு உதவித் தொகை மற்றும் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, நினைவுத்தூண், வளைவுகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டமும் நடத்தி, தேர்தலில் போட்டியிட 25 பேரிடம் விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளன. அந்த விருப்பமனுக்கள் போயஸ்கார்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


பொது வேட்பாளரா? தி.மு.க.,வில் கடந்த தேர்தலில் பெரியண்ண அரசு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது பொது வேட்பாளரை நிறுத்தி பார்லிமென்ட் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடலாமா? என்ற குழப்பத்திற்கு தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, பெரியண்ண அரசின் பெயரும் அடிபடுகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரும் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. தி.மு.க, போட்டியிட்டால், தே.மு.தி.க., ஆதரவு கிடைக்காது. காங்கிரஸ் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தே.மு.தி.க.,வின் ஆதரவு எளிதாகக் கிடைக்கும். இது தி.மு.க.,- காங்கிரஸ்- தே.மு.தி.க., கூட்டணியை லோக்சபா தேர்தலில் உருவாக்குவதற்கு அச்சாரமாக அமையும் என்ற கணக்கும் தி.மு.க.,வில் வகுக்கப்பட்டுள்ளது. மாஜி மூத்த அமைச்சர்கள் இருவர் தி.மு.க., தலைமையிடம், "காங்கிரசுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அக்கட்சி தனது ஓட்டு சதவீத கணக்கை முன்னிலைப்படுத்தி, லோக்சபா தேர்தலில் பேரம் பேசும் வாய்ப்பு உள்ளது. எனவே, நமது கட்சியே போட்டியிடலாம்' என, தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கலாம் என தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.


மற்ற கட்சிகளின் நிலைப்பாடு: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட திராணியிருக்கிறதா? என முதல்வர் விடுத்த சவாலுக்காக தே.மு. தி.க., போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட வேண்டிய எந்த நிர்பந்தமும் அக்கட்சிக்கு இல்லை என்பதால், பொதுவேட்பாளரை ஆதரிக்கவும் அல்லது தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது. அப்படி போட்டியிட்டால் அக்கட்சியை தனிமைப்படுத்த தி.மு.க., கங்கணம் கட்டியுள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தே.மு.தி.க., ஆதரவு கிடைக்காது. காரணம், உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது. சங்கரன்கோவிலில் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்தது.


ஐந்து முனைப் போட்டி: பொது வேட்பாளராக காங்கிரசை நிறுத்தினால், அக்கட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கும். அதேபோல் காங்கிரசை ம.தி.மு.க., வும் ஆதரிக்காது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ம.தி.மு.க., ஆதரிக்குமா? அல்லது அக்கட்சி போட்டியிடுமா? என்பது குறித்து முடிவு எடுக்க வரும் 20ம்தேதி சென்னையில் ம.தி.மு.க.,வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் கூடுகிறது. ஆக மொத்தத்தில், இந்த தேர்தல் விசித்திரமான தேர்தலாகத் தான் அமையப் போகிறது. பொது வேட்பாளருக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றால், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என, 5 முனைப் போட்டி நிலவும் வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை எந்தக் கட்சியின், "கோட்டையாக' மாறப்போகிறது என்பது வாக்காளர்களுக்குத் தான் வெளிச்சம்.


- எஸ்.சிந்தாஞானராஜ் -


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - delhi,இந்தியா
15-ஏப்-201215:54:49 IST Report Abuse
Krish ஏதோ இது மாதிரி இடை தேர்தல் வரும்போதுதான் வாக்களர்களுக்கு மரியாதையை மட்டுமின்றி அவரது குடும்பத்தில் வுள்ள வாக்களர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப "" &39&39 மதிப்பும்""" ஏற்படுகிறது..இதை பொறுத்துக்க முடியலையா வுங்களால ??
Rate this:
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
15-ஏப்-201215:15:43 IST Report Abuse
S  T Rajan ஜெயிக்கலனாலும் நேத்து தோனி மாதிரி போட்டியாக இருக்கும் கம்யூனிஸ்ட்
Rate this:
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201212:53:59 IST Report Abuse
S. ரெகுநாதன் அஞ்ச நேசன் எங்கப்பா..??? எல்லோரும் கூப்பிட்டு ஞாபகபடுத்துங்கபா...அவர் துள்ளி குதித்து வந்து எத்தனை ஒட்டு வித்தியாசதில் திமுக ஜெயிக்கும் சொல்வார்...நாமெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு ஆனந்த படலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X