சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்றாலத்தில் திடீர் டி.எஸ்.பி.,கைது

Added : ஜூலை 22, 2010
Share
Advertisement
திருநெல்வேலி : குற்றால அருவியில் குளிப்பதற்காக, திடீர் டி.எஸ்.பி.,யாக மாறியவர் கைது செய்யப்பட்டார். குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மெயின்அருவி, பழைய அருவி, ஐந்தருவி என எல்லாவற்றிலும் எப்போதுமே குளியல் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துதான் குளிக்க முடிகிறது. சிலர் வரிசையில் காத்திருக்க முடியாமல், யாராவது அதிகாரிகளுக்கு உறவினர்கள் என கூறி

திருநெல்வேலி : குற்றால அருவியில் குளிப்பதற்காக, திடீர் டி.எஸ்.பி.,யாக மாறியவர் கைது செய்யப்பட்டார். குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மெயின்அருவி, பழைய அருவி, ஐந்தருவி என எல்லாவற்றிலும் எப்போதுமே குளியல் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துதான் குளிக்க முடிகிறது. சிலர் வரிசையில் காத்திருக்க முடியாமல், யாராவது அதிகாரிகளுக்கு உறவினர்கள் என கூறி குளிக்கின்றனர்.

நேற்று திண்டுக்கல், செம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(38) என்பவர் ஐந்தருவியில் குளிக்க வந்தார். வரிசையில் நிற்காமல், நேராக சென்ற அவரை பாதுகாப்பிற்கு நின்றுகொண்டிருந்த போலீசார் தடுத்தனர். நான் டி.எஸ்.பி., என்னை தடுக்கிறீர்களா? என தகராறு செய்தார். "ஐயா..எந்த ஊர் டி.எஸ்.பி.,' என போலீசார் கேட்டனர். அவர் "திண்டுக்கல்' என்றார். "சரி.. ஐயா எந்த பேட்ஜ்..என கேட்டனர். அந்த நபர் "பேட்ஜ் கொண்டுவரலையே'..என்றார். அப்படியா.. உங்களை ஐயா கூப்பிடுகிறார் என்றவாறு, போதையிலிருந்த அவரை கைத்தாங்கலாக குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.


ஸ்டேஷனை பார்த்தவுடன் போதை தெளிந்த அவர், செம்பட்டி பகுதியில் மளிகை கடை வைத்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டிற்கு அனுப்பிவைத்தனர். கடந்த ஒன்றரை மாதத்தில், டாஸ்மாக் தயவால் தகராறு, பெண்களை கேலி கிண்டல், போதையில் வாகனம் ஓட்டியவர்கள் என இதுவரை 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X