சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated : ஜூலை 22, 2010 | Added : ஜூலை 22, 2010
Share
Advertisement
சென்னை : முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அவசர ஆம்புலன்ஸ் சேவையான, "108'க்கு நேற்று அதிகாலை 1:50 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய ஆண்குரல், முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து,

சென்னை : முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அவசர ஆம்புலன்ஸ் சேவையான, "108'க்கு நேற்று அதிகாலை 1:50 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய ஆண்குரல், முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து, போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


போலீசார், முதல்வர் வீட்டிற்கு வந்தனர். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ரகசியமாக சோதனை செய்தனர். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. தொடர்ந்து, ராயப்பேட்டை போலீசார் மர்ம போன் குறித்து விசாரித்த போது, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மொபைல் போனில் பேசியது தெரிந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X