பதிவு செய்த நாள் :
கருத்துகள்  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:



ரமணன் பத்மநாபன்; சென்னையில் உள்ள குறிப்பிடத்தக்க "வைல்டு லைப்' போட்டோகிராபர்களில் ஓருவர். எதையும் மேம்போக்காக சொல்லாமல் ஆழமாகவும், தக்க ஆதாரத்துடனும் சொல்ல வேண்டும் என்று விரும்புபவர். இயற்கை ஆர்வலரான இவர், தான் பார்த்த,சேகரித்த வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய உண்மைகளை சொல்வதற்காக படமெடுக்கத் துவங்கியவர். சாதாரணமாக குளத்தில் மாடுகளுடன் சுற்றித் திரியும் கொக்குகள் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் கழுத்து பகுதியில் பொன்நிற முடிகளுடன் காணப்படும்; அந்த காலத்திற்காக காத்திருந்து படமெடுத்தவர். கிங்பிஷர்' என்ற பறவை மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் என்று சொன்ன போது இல்லை அவை பாம்பைக்கூட உணவாக எடுத்துக்கொள்ளும் என்று படத்துடன் சொன்னவர். "நைட் ஹெராயின்' என்ற பறவை பகலிலும் உணவிற்காக வெளிவரும் என்பதை பதிவு செய்தவர். திசை மாறிவந்த "டார்க்கர் சைடு பிளை கேட்சர்' என்ற அபூர்வ பறவையை படமெடுத்தவர்.

யானையின் காது மடிப்புகளை வைத்து அதன் வயதை கணிக்கக்கூடியவர். மான் முதல் புலி வரை எங்கு படமெடுக்கலாம், எப்போது படமெடுக்கலாம், எப்படி படமெடுக்கலாம் என்பதை விரல்நுனியில் விவரமாக வைத்திருப்பவர். வடமாநிலங்களில் உள்ள பல்வேறு வனவிலங்கு ரிசார்ட்ஸ்களில் இவரது படங்கள்தான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள வன அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை வைத்துள்ளதால், இங்குள்ள இது தொடர்பான புகைப்படக்கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை அடிக்கடி அழைத்துச் செல்லக்கூடியவர். சென்னையின் மத்தியில் உள்ள பாதுகாக்கப்பட்ட நன்மங்கலம் காட்டில் உள்ள அபூர்வமான ஆந்தைகளை படமெடுத்தவர், சரியாகச் சொல்வதானால் இந்த நன்மங்கலம் காடு இன்றைக்கு இந்த அளவு பாதுகாக்கக்ப்பட்டுள்ளதற்கு
இவரும் ஒரு முக்கிய காரணம். இங்குள்ள

Advertisement

ஆந்தையை படமெடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் விடாமல் இந்த காட்டிற்கு போய், ஒரு படம் கூட எடுக்காமல் வெறுங்கையுடன் திரும்பினாலும், முயற்சியை கைவிடாததன் காரணமாக, இன்று இவரிடம் உள்ள அளவிற்கு வேறு யாரிடமும் ஆந்தை தொடர்பான படங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பறவையாகட்டும், விலங்காகட்டும் ஒவ்வொன்றுக்கும் பருவம் உண்டு அந்த பருவத்தில்தான் அதன் அழகு முழுமையாக வெளிப்படும், அது எந்த காலம் என்பதை படங்களுடன் மாணவர்களுக்கு பாடமாக நடத்துபவர். தனக்கு இந்த பாதையை காட்டிய குருசாமியே தன்குரு என்று நன்றியுடன் குறிப்பிடுபவர். தனது தந்தையும், காந்தியவாதியும், காந்திகிராம முன்னேற்றத்திற்கு பாடுபட்டவருமான மறைந்த பத்மநாபன் கற்றுக்கொடுத்த எளிமை, உண்மை, நேர்மையுடன் வாழ்ந்துகொண்டு இருப்பவர் புகைப்படம் மூலம் துளியும் பொய் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வனவிலங்குகள் மற்றும் பறவைகளை படமெடுத்துக்கொண்டு இருப்பவர். இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து காடுகளுக்கும் செசன்றுள்ளார். பறவைகளை படமெடுப்பதற்காக "ரைபிள் கிரிப்' என்ற சாதனத்தை தனக்கு வசசதியாக மாற்றியமைத்துக் கொண்டவர். கேமிரா லென்ஸ் இவைகளை ஆராய்ந்து தற்போது இவர் லைகா லென்ஸ்களுடன் கூடிய கேமிராவையே பயன்படுத்துகிறார்.
இவர் எடுத்த படங்கள் சர்வதேச அளவில் பிரசுரமாகியுள்ளது. வைல்டு லைப் போட்டோகிராபியில் மாஸ்டராக விளங்கும் ரமணனிடம் தொடர்பு கொள்ள விரும்புவர்களுக்கு அவரது மெயில் விலாசம்
Rramanan_padmanabhan@yahoo.co.in

- டாக்டர் பி.சுகுமார்




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X