Kalvimalar | வித்தியாசமான வெளிநாட்டு படிப்புகள்...| Dinamalar

வித்தியாசமான வெளிநாட்டு படிப்புகள்...

Added : மே 03, 2012
Advertisement
வித்தியாசமான வெளிநாட்டு படிப்புகள்...

கிரியேட்டிவ் மீடியா: கிரியேட்டிவ் மீடியா, கலை மற்றும் கலாசார துறையில், உலகெங்கிலுமுள்ள பல முக்கியப் பல்கலைக்கழகங்கள், எப்போதுமே அதிகளவிலான படிப்புகளை வழங்குகின்றன. ஏனெனில், டிஜிட்டல் மீடியா, அனிமேஷன் மற்றும் விளம்பரம் போன்ற துறை களில், இன்றைய போட்டிகள் மிகுந்த சூழலில் திறன்வாய்ந்த நிபுணர்கள் தேவைப் படுகிறார்கள்.
மேற்கண்ட துறைகளுக்கும், Creative writing, Drama and Theatre studies, Film making, Screen & writing மற்றும் Shooting documentaries போன்ற படிப்புகளை மேற்கொள்ள பல மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர்.
இவை தொடர்பான பல படிப்புகள் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன. மேலும், Fashion ©ØÖ® Life style துறைகளில் பல சிறந்த படிப்புகள் பிரான்ஸ் நாட்டில் வழங்கப்படுகின்றன.
பராமரிப்பு தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள ஹாலந்து நாட்டிற்கும், தோல் மற்றும் காலணி தயாரித்தல் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள இத்தாலி நாட்டிற்கும் மாணவர்கள் செல்கின்றனர்.
மேலும், இந்தியாவில் இன்று மாறிவரும் பொருளாதார சூழல், பலவித புதுமையான தொழில்களைத் தொடங்க இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பை வழங்குகிறது. உதாரணமாக, செல்லப் பிராணிகள் வளர்ப்பது தொடர்பாக ஒரு படிப்பை வெளிநாட்டில் முடித்தால், அதுதொடர்பாக தொழில்தொடங்க, இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது.
சுற்றுச்சூழல்: இன்றைய நிலையில், ஓரளவு படித்த பல இந்திய இளைஞர்கள், எங்கேனும் கூடினால், சுற்றுச்சூழல் மற்றும் அதன் மாசுபாடு பற்றி பேச ஆரம்பித்து விடுகின்றனர். அந்தளவிற்கு அவர்களில் பலருக்கும் இத்துறையில் மிதமான மற்றும் மிகையான ஆர்வம் இருக்கிறது.
வெளிநாடுகளில், சுற்றுசூழல் தொடர்பான, சுற்றுச்சூழல் தாக்க அளவீடு, கார்பன் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொருளா தாரம் உள்ளிட்ட பலவிதமான சுற்றுச்சூழல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பு: Adventure Tourism, Exercise Rehabilitation Science, Gaming and Hospitality Management, Wine Making, Casino management, Screen writing, Curatorial science and Carbon management போன்ற படிப்புகளை, வெளிநாட்டில் மேற்கொள்வதில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பரந்த விசாலமான வாய்ப்புகள் மற்றும் வித்தியாசமான அனுபவங்கள் போன்றவையும் பல இந்திய மாணவர்களை வெளிநாட்டை நோக்கி தள்ளும் காரணிகளாக உள்ளன.
ஒருவேளை, நாளை இந்தியாவிலும் சூழல் மாறலாம்.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X