ஈவென்ட் மேனேஜ்மென்ட்

Added : மே 03, 2012
Advertisement
ஈவென்ட் மேனேஜ்மென்ட்

ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்பது, ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுத்து நடை முறைப் படுத்துவதாகும்.
தகுதிகள்: ஒரு சிறந்த ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பேரார்வம், சிறப்பான ஒருங்கிணைக்கும் திறன், அதிகநேரம் பணிபுரியக்கூடிய உடல்வலிமை மற்றும் மனவலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதேசமயம், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு, எம்.பி.ஏ., பட்டத்துடன், பொதுமக்கள் தொடர்பு திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு ஈவென்ட் நடத்துவதில், மக்களை சந்திப்பது, பொருத்தமான இடத்தை தேர்வுசெய்வது, உணவு ஏற்பாடு செய்வது, பூக்கள் அலங்காரம் செய்வது போன்ற பல பணிகள் இருக்கின்றன. மேலும், ஒளி-ஒலி ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடமானது பார்ப்பதற்கே மகிழ்வை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சி நடக்கும்போது ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் பிற எதிர்பாராத சம்பவங்களையும் சமாளிக்கும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பணியின் தன்மை: ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதை மனதிற்குள் வடிவமைத்தல், அதற்கான தேவைகளை ஆராய்தல், அந்நிகழ்ச்சியை நடத்துபவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளுதல், வரவு-செலவு கணக்கு தயாரித்தல், திட்டமிடுதல், ஏற்பாடு செய்தல், செயல்படுத்துதல், பிற விளம்பரதாரர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவைப்படும் அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெறுதல், மேடை அமைப்பை திட்டமிட்டு காட்சிப்படுத்தல், நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்கான மீடியா தொடர்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகள் இத்துறை சார்ந்தவை.
பேஷன் ஷோ, இசை நிகழ்ச்சி, வர்த்தக நிறுவன கருத்தரங்கம், கண்காட்சிகள், திருமண நிகழ்ச்சிகள், பார்ட்டிகள், திறன் வெளிகாட்டும் நிகழ்ச்சிகள் போன்றவை அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை.
வேலைவாய்ப்புகள்: ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம். அதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பெரிய நிறுவனங்களுக்கு செல்லலாம். மேலும், எதிலும் ஊழியராக சேராமல், ப்ரீ லேன்சராக பணிபுரியும் வாய்ப்பும் உண்டு. Promotion coordinator ஆகவும் உங்கள் பணியை துவக்கலாம். இதற்கு, நிகழ்சிகளை நடத்துவது பற்றி சிறந்த அறிவையும், திறனையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உங்களிடம் சிறிது முதலீடும் இருக்க வேண்டும்.
பல பெரிய நிறுவனங்கள், தங்களில் ஒரு பணியாளராக ஈவென்ட் மேலாளர்களை வைத்துள்ளன. அதேசமயம், நீங்கள் ஒருங்கிணைத்து கண்காணிப்பதில் சரியாக செயல்படவில்லை என்றால், நஷ்டம் உங்களுக்குத்தான். எனவே நெட்வொர்கிங் மிக சிறப்பாக இருந்தால்தான் வெற்றிபெற முடியும்.
சம்பளம்: நடக்கும் நிகழ்ச்சியைப் பொறுத்தும், ஒரு நிகழ்ச்சி வணிகரீதியாக வெற்றி பெறுவதைப் பொறுத்துமே வருமானம் அடங்கியுள்ளது. பொதுவாகவே இதில் வருமானம் அதிகம். பொதுமக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றில் படிப்பை மேற்கொள்வது, ஈவென்ட் மேலாண்மையில் உதவும். மேலும், சந்தைப்படுத்தலை(மார்க்கெட்டிங்) பற்றி எம்.பி.ஏ. படிப்பதானது மிகவும் சிறந்தது.
முக்கிய கல்வி நிறுவனங்கள்:


Amity Institute of Event Management, Delhi
College of Event and Management, Pune
Event management developement institute, Bandra, Maharashtra
National Institute of Event Management, Mumbai
National Institute of Fashion and Events, Japalpur
போன்றவை இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X