Kalvimalar | கேள்வி பதில்| Dinamalar

கேள்வி பதில்

Added : மே 05, 2012
Advertisement
கேள்வி பதில்

என் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். முதுநிலையில் மேலாண்மை படிக்க விரும்புகிறேன். பி.ஜி.டி.எம் மற்றும் எம்.பி.ஏ., இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் நல்லது?
AICTE விதிகளின்படி, எந்தப் பல்கலைக்கழகத் திலும்(சுயாட்சி கல்வி நிறுவனம்) இணைக்கப்படாத, 2 வருட முழுநேர பொது மேலாண்மைப் படிப்புகள், மேலாண்மைப் படிப்பின் முதுநிலை டிப்ளமோ (PGDM) என்றுதான் வகைப்படுத்தப்படும்.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 2 வருட முழுநேர மேலாண்மைப் படிப்புதான் MBA எனப்படும். IIM கள் வழங்கும் மேலாண்மைப் படிப்புகள் கூட, PGPM என்றுதான் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், IIM என்பவை பல்கலைகளோ அல்லது பல்கலைகளுடன் இணைக்கப்பட்டவையோ அல்ல.
அதேசமயம், வெறும் பெயர்களை வைத்து கல்வியின் தரத்தையும், மதிப்பையும் கணக்கிட முடியாது. நீங்கள் மேலாண்மைத் துறையில், எதிர்காலத்தில் பிஎச்.டி ஆய்வை மேற்கொள்ள விரும்பினால், எம்.பி.ஏ., பட்டப் படிப்பைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
அதேசமயம், PGDM படிப்பும், MBA படிப்பிற்கு நிகரானது மற்றும் MBA மூலம் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் இதன்மூலமும் கிடைக்கும் என்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தால் (Association of Indian Universities)அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பை முடித்த பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
உங்களது பி.எஸ்சி., இயற்பியலை முடித்தப்பிறகு, எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை முக்கியமாகக் கொண்ட எம்.எஸ்சி., படிப்பை, ஐ.ஐ.டி., போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி., -யில் இடம்பெற JAM (எம்.எஸ்சி படிப்பிற்கான கூட்டு சேர்க்கைத் தேர்வு) எழுதி தகுதிபெற வேண்டும்.
இன்னொரு வழி என்னவெனில், பி.இ. படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்து, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் தேர்வை எழுத வேண்டும். ஏர் டிராபிக் கன்ட்ரோலர் தொழிலைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.atcguild.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X