Kalvimalar | அறிவியல் துறையில் அதிநுட்ப முதுநிலைப் படிப்புகள்| Dinamalar

அறிவியல் துறையில் அதிநுட்ப முதுநிலைப் படிப்புகள்

Added : மே 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

எம்.எஸ்சி., பொதுசுகாதாரம் மற்றும் பூச்சியியல்: M.sc., Public Health Entomology-) வெப்பமண்டல நாடுகளில் எளிதில் பரவக்கூடிய நோய்களான பிளேக், கொள்ளை நோய், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களைத் தடுப்பது குறித்த ஆய்வில் புதுவை வெக்டார் கன்ட்ரோல் ஆய்வு மையம் (VCRC) முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இத்துறை சார்ந்த படிப்பை, M.sc., Public Health Entomology என்ற பெயரில் வழங்குகிறது. இரண்டாண்டு படிப்பான இதற்கு, பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், வாழ்க்கை அறிவியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், உண்வேதியியல், கால்நடை மருத்துவம், எம்.பி.பி.எஸ்., - உயிரி தொழில்நுட்பவியலுடன்(பயோ டெக்னாலஜி) கூடிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக்கட்டணமாக 5948 ரூபாய் செலுத்த வேண்டும். மிகச்சிறந்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் பணிப் பயிற்சியை ஊக்கத்தொகையுடன் பெறலாம். உலக சுகாதார நிறுவனம் சார்ந்த அமைப்புகள், பொதுசுகாதாரத்துறை, என்.ஜி. ஓ.,க்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். படிப்பு குறித்த மேலும் விவரங்களை http://vcrc.res.in என்ற முகவரியில் காணலாம். குருகோவிந்த்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்திலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
எம்.எஸ்சி., உணவுத் தொழில்நுட்பம்: (Food Technology) உலகமயமாக்கல் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணவு சார்ந்த மக்களின் தேவைகள் ஒரு போதும் குறைவதாயில்லை; வெவ்வெறு வகைகளாக விரிவடையவே செய்கிறது. உணவுசார் துறையில், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்ப மையம் இரண்டாண்டு முதுகலைப் படிப்பை வழங்குகிறது. உணவுத் தொழிற்சாலை, தயாரிப்புக்கான தேவை, நுகர்வோர் விழிப்புணர்வு, உலகமயமாதல் உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மேலும், இத்துறை சார்ந்த சட்டங்கள், விதிமுறைகள், முகவர் நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகின்றன. உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல், காய்கறி, பழங்கள், தானியங்கள், பண்ணை உற்பத்திப் பொருட்கள், பால், இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவு தயாரிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்யப்படுகிறது.நான்கு பருவங்களாக இரண்டாண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. பி.எஸ்சி., வேதியியல், உயிரி வேதியியல், மனையியல், மனைப் பொருளியல், வேளாண் மை, வேளாண் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இளநிலைப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.alldunivips.in/ என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம். மைசூர் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு மையம்(இஊகூகீஐ) நாக்பூர் பல்கலைக்கழகம், அனந்தபூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
எம்.எஸ்சி., உயிரிபுள்ளியியல்: -(-Biostatistics-) வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் உயிரிபுள்ளியியல் துறை இப்படிப்பை இரண்டாண்டு படிப்பாக வழங்குகிறது. இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து 46 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொள்ளை நோயியல், ஆய்வகங்கள், மருத்துவ விசாரணைகள் உள்ளிட்டவற் றுக்கு இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது. இரண்டாம் ஆண்டில், மாணவர்கள் மருத்துவமனைகளில் புள்ளிவிவர ஆலோசகர்களாக பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். இரண்டாம் ஆண்டில் நிறைவான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச மருந்துக்கம்பெனிகள் இந்தியாவில் அடியெடுத்து வைத்திருப் பதை அடுத்து, இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், அமிர்தா இன்ஸ்டி டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. புள்ளியியலை முதன்மைப் பாடமாகவோ, துணைப் பாடமாகவோ படித்திருப்பது அவசியம். இத்துறை சார்ந்த மேலும் விவரங்களுக்கு www.cmcbiostatistics.ac.in என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.
எம்.எஸ்சி., மருத்துவ நுண்ணுயிரியல்: (Medical Microbiology) நோய்த்தாக்குதலுக்குக் காரணமான கரிமங்கள் பற்றி இவ்வியல் கற்றுத்தருகிறது. சில கரிமங்கள் எப்படி நோய்த்தொற்றுக்குக் காரணமாகின்றன, எப்படி பரவுகின்றன, மனித உடலில் அவை எப்படி வினைபுரிகின்றன, அவற்றை முற்றிலுமாக அழிப்பது எப்படி என்பவை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. கண்ணூர் பல்கலைக்கழகத்தில், உயிரி மருத்துவ கருவியாக்கம் மற்றும் ஆய்வில் அணுகுமுறைகள், நோய் எதிர்ப்பியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் மருத்துவ மரபணுவியல், கிளினிக்கல் மைக்ரோ பயாலஜி, பரிசோதனை நுண்ணுயிரியல் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கி பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதே துறையில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் இரண்டாண்டு படிப் பாகவும்; பி.எஸ்சி பயாலஜிக்கல் சயின்ஸ், நுண்ணுயிரியல், உயிரி தொழில் நுட்பம், உயிரிவேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியலை ஒரு பாடமாகப் படித்த வேதியியல் பட்டதாரிகள் மூன்றாண்டு படிப்பாக படிக்கலாம். தளசேரியில் உள்ள ஸ்கூல் ஆப் ஹெல்த் சயின்ஸ் இப்படிப்பை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு www.kannuruniversity.ac.in என்ற இணைய முகவரியை பார்க்கவும். ஜிப்மர் பல்கலைக்கழகத்திலும் இப்படி ப்பு உள்ளது.
எம்.எஸ்சி., மருத்துவ உயிரிவேதியியல்: (Medical biochemistry)மூன்றாண்டு படிப்பாக ஜிப்மர் இதை வழங்குகிறது. ஆண்டுக்கு 1,200 ரூபாய் கட்டணம். சேர்க்கைக் கட்டணம் 3,000 ரூபாய். வேதியியல், உயிரி வேதியியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டில்லி பல்க லைக்கழகம், கண்ணூர் பல்கலைக் கழங்களும் இப்படிப்பை வழங்குகின்றன. உயிரி வேதியியல் வினைமாற்ற ங்களைப் பற்றிய இப்படிப்பை முடித்தவர்கள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் எளிதில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu


Masters in Habitat policy &Practice: மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் இரண்டாண்டுப் படிப்பாக வழங்குகிறது. சமூக அறிவியல், சட்டம் பயின்றவர்களுக்கு எம்.ஏ., பட்டமாகவும்; உடலியல் அறிவியல், பொறி யியல், கட்டடக் கலையியல் முடித்தவர்களுக்கு எம்.எஸ்சி., பட்ட மாகவும் வழங்கப்படுகிறது. நகரியக் கொள்கை தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து ரூபாயும்; மற்றவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.tiss.edu


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X