கேள்வி பதில்

Added : மே 08, 2012
Advertisement
கேள்வி பதில்

* எனது பெயர் சுரேஷ். டி.பார்ம் மற்றும் பார்மா.டி ஆகிய படிப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

டி.பார்ம் என்பது, பள்ளிப் படிப்பை முடித்தவுடன் படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பு. இதை முடித்தவுடன், ஒரு பார்மாசிஸ்டாக பதிவுசெய்து கொண்டு, நீங்கள் பிராக்டிசில் ஈடுபடலாம். பார்மா.டி என்பது, 6 வருட படிப்பாகும். கிளீனிக்கல் பார்மசியில் பணிசெய்ய ஆசைப்படும் நபர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம்.

இத்துறையில், வெறும் மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் உள்ளடக்கம், உற்பத்தி மற்றும் மனித உடலில் அந்த மருந்து உண்டாக்கும் விளைவுகள் குறித்தும் விஷயங்கள் அடங்கியுள்ளன. இந்தப் படிப்பு உங்களை கிளீனிக்கல் மருத்துவருக்கு இணையாக்குகிறது. மேலும், மருத்துவமனைகளில், சிகிச்சையளிக்கும் ஒரு குழுவாகப் பணியாற்றுவீர்கள். இந்தியாவில், 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளே இந்த பார்மா.டி. படிப்பை இப்போதைக்கு வழங்குகின்றன.

* எனது பெயர் சுகுணா. நான் அடுத்த ஆண்டு எனது பி.காம் படிப்பை முடிக்கவுள்ளேன். எதிர்காலத்தில், MBA அல்லது CFA (Chartered financial analyst) ஆகிய படிப்புகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளது. எனவே, எந்தப் படிப்பு நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடியது என்பதை தெரியப்படுத்தவும்.

CFA என்பது தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டிய ஒரு தொழில்முறை படிப்பு. இந்தப் படிப்பின் மூலமாக, முதலீடு, ஆடிட்டிங் மற்றும் நிதி பகுப்பாய்வு போன்ற துறைகளில் நீங்கள் வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். அதேசமயம், MBA படிப்பதன் மூலமாக, நிதி, மனிதவளம், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் (உங்களின் specialisation- ஐ பொறுத்தது) நிர்வாக பணி வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் படிப்பானது, உங்களின் விருப்பப் பாடம், திறமை மற்றும் தனிப்பட்ட ஆளுமை ஆகியவற்றுக்கு ஒத்துவரக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயம், இந்த 2 படிப்புகளில் எதைப் படித்தாலும், அபரிமிதமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X