சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் ஊழியர்களின் கவனக்குறைவு அம்பலம்

Added : ஜூலை 24, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேலம்:சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கமாக மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து விருத்தா சலத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் சம்பவத்தன்று மூன்றாவது பிளாட்பாரத்தில் ரயில் இல்லாததால், பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். அதே சமயம் அந்த ரயில் முதல் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது ரயில்வே ஸ்டேஷனில், "மைக்' மூலம் முதல் பிளாட்பாரத்துக்கு மங்களூரில் இருந்து சென்னை செல்லும், "வெஸ்ட் கோஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயில் வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்து, பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்."ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மூன்றாவது பிளாட்பாரத்தில், "வெஸ்ட் கோஸ்ட்' ரயில் வந்து நிற்கும் என அறி விக் கப்பட்டது.விருத்தாசலம் ரயிலுக்காக மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் முதல் பிளாட்பாரத்தை நோக்கியும், வெஸ்ட் கோஸ்ட் ரயிலுக்காக முதல் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மூன்றாவது பிளாட்பாரத்தை நோக்கியும் ஓட்டம் பிடித்தனர். அப்போது, இடிபாடுகளில் ஒருவருடன் ஒருவர் சிக்கி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இது குறித்து, துறை ரீதியாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். "


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magesh - KL,மலேஷியா
24-ஜூலை-201009:03:22 IST Report Abuse
magesh Please avoid like this announcement at raliway station & any other like this place.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X