கேள்வி பதில்

Updated : மே 09, 2012 | Added : மே 09, 2012
Advertisement

எனது பெயர் பிரபாகர். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.

பல கப்பல் நிறுவனங்கள், 1 வருட கடல் பயண தயாராதல் பயிற்சிகளை வழங்குகின்றன. கோவாவிலுள்ள Institute of maritime studies, Barber ship management (www.imsgoa.org), Garden reach shipbuilders
and engineering(GRSE), Kolkatta (www.grec.nic.in) Great eastern shipping co ltd, Mumbai(www.greatship.com) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. மும்பையிலுள்ள The Shipping Corporation of India, பயிற்சிபெறும் மரைன் இன்ஜினியர்களை பணியில் அமர்த்துகிறது.
ஒரு பொதுவான விதிமுறை என்னவெனில், இத்தகைய பயிற்சிகளில் சேர்பவர்களுக்கு, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேதியின்படி, 24 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. கண்ணாடி (- or + 2.5) அணிந்திருந்தாலும், நிறக்குருடு குறைபாடு அற்றவராக இருத்தல் வேண்டும். இத்தகையப் பயிற்சிகள், உங்களுக்கு, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இதுதொடர்பான, இன்னும் அதிகமான தகவல்களுக்கு www.dgshipping.com என்ற வலைதளம் செல்க.


என் பெயர் மதினா. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும்.

நிதி, கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், சந்தைப்படுத்தல் மற்றும் இடர்பாடு மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளில், ஒருவருக்கு திறன்களை வழங்கும் பொருட்டு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள், கணித பகுப்பாய்வு, புள்ளியியல் மற்றும் சாத்தியக்கூறு தியரி ஆகியவைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள், முதுநிலை பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

UCLA, New york university, Georgia tech, Columbia and UC Berkeley போன்றவை, அமெரிக்காவில், பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பதற்கான பிரதான கல்வி நிறுவனங்கள். மேற்கூறிய ஒவ்வொரு கல்வி நிறுவனமும், மாணவர் சேர்க்கை முறையில் தனித்தனி நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், அனைத்துமே, இளநிலைப் படிப்பில் ஒருவர் துறை சார்ந்த அதிக அம்சங்களை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X