மோனலிசா சிரிப்பின் ரகசியம் என்ன? விஞ்ஞானிகள் ஆய்வு

Added : ஜூலை 24, 2010 | |
Advertisement
பாரீஸ் : மோனலிசா ஓவியம், எப் போதும் புத்தம் புது பொலி வுடன் காட்சியளிக்க என்ன காரணமென்பது குறித்து, பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனலிசா ஓவியமும், அதன் மர்ம புன்னகையும் உலகப் புகழ் பெற்றது. மேலும், அந்த ஓவியத்தில் மிக நுணுக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணக் கலவையால், அந்த ஓவியம் உயிரோட்ட முள்ளதாக
மோனலிசா சிரிப்பின் ரகசியம் என்ன? விஞ்ஞானிகள் ஆய்வு

பாரீஸ் : மோனலிசா ஓவியம், எப் போதும் புத்தம் புது பொலி வுடன் காட்சியளிக்க என்ன காரணமென்பது குறித்து, பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனலிசா ஓவியமும், அதன் மர்ம புன்னகையும் உலகப் புகழ் பெற்றது. மேலும், அந்த ஓவியத்தில் மிக நுணுக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணக் கலவையால், அந்த ஓவியம் உயிரோட்ட முள்ளதாக விளங்குகிறது.


அதில், பல அடுக்குகளாக வண்ணக் கலவைகள் எந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து, பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எக்ஸ்-ரே ஸ்கேனர், சோலார், லேசர் உள்ளிட்டவற்றைக் கொண்டு, அந்த ஓவியத்தின் ஒவ்வொரு அடுக்கையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது: மோனலிசா ஓவியத்தின் உயிரோட்டம் மற்றும் அதன் கண்ணாடி போன்ற பளபளபுக்குக் காரணம், அதில் பல அடுக்குகளாக வண்ணக் கலவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தான். இதில், 12 அடுக்குகளாக வண்ணக் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கும் 1 அல்லது 2 மைக்ரோ மீட்டர் தடிமன் உடையது. இதன் மூலம் தான், அந்த ஓவியத்திற்கு பளபளப்பு இருப்பதுடன், புகைப்படம் போன்றும் தோற்றமளிக்கிறது.


இதே போன்று ஓவியம் வரைய, பல காலக்கட்டங்களில் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆனால், அதில் பாதி கூட வரவில்லை. காரணம், டாவின்சியின் ஓவிய நுட்பம் மிக நுணுக்கமாக அமைந்திருப்பதுதான். டாவின்சியின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவிய நுட்பங்களை கண்டறிவதன் மூலம், தற்கால ஓவியக் கலைக்கு சிறப்பு சேர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X