உலகின் பழமையான எழுத்து கண்டுபிடிப்பு

Added : ஜூலை 24, 2010 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜெருசலேம் :  உலகின் மிகப் பழமையான எழுத்துக்கள் பொறித்த களிமண் துண்டு ஒன்று, இஸ்ரேல் நாட்டின் ஜெருச லேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகத் தொன்மை யான நகரம் இஸ்ரேலின் ஜெருசலேம். இந்நகரத்தின் கிழக்குப் பகுதியோடு இணைந்துள்ள, இஸ்ரேலி என்ற இடத்தில் பழைய ஜெருசலேம் அமைந்துள்ளது. இதன் தென் பகுதி யில் உள்ள கோட்டைச் சுவருக்கருகில், கி.மு.,10ம் நூற்றாண்டைச் சேர்ந்த
உலகின் பழமையான எழுத்து கண்டுபிடிப்பு

ஜெருசலேம் :  உலகின் மிகப் பழமையான எழுத்துக்கள் பொறித்த களிமண் துண்டு ஒன்று, இஸ்ரேல் நாட்டின் ஜெருச லேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகத் தொன்மை யான நகரம் இஸ்ரேலின் ஜெருசலேம். இந்நகரத்தின் கிழக்குப் பகுதியோடு இணைந்துள்ள, இஸ்ரேலி என்ற இடத்தில் பழைய ஜெருசலேம் அமைந்துள்ளது. இதன் தென் பகுதி யில் உள்ள கோட்டைச் சுவருக்கருகில், கி.மு.,10ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபுரம் ஒன்று உள்ளது.


இதன் அடியில் குவிந்திருந்த இடிபாடுகளை, சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்கள் அகற்றினர். அப்போது அந்த இடிபாடுகளுக்கிடையில், ஒரு களிமண் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு செ.மீ., அகலமும், 2.8 செ.மீ., உயரமும் கொண்ட இக்களிமண் துண்டில், "நீங்கள், அவர்களை' என்று எழுதப்பட்டுள்ளது. இக்களிமண் துண்டின் காலம், கி.மு., 14ம் நூற்றாண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது.


அதாவது இன்றிலிருந்து 3,400 ஆண்டுகள் பழமையானது இக்களிமண் துண்டு. இதே காலகட்டத்தில், எகிப்தை ஆண்ட பாரோ வம்சத்தைச் சேர்ந்த அகி னாட்டன் என்ற மன்னர் காலத்து 380 களிமண் துண்டுகள், எகிப்தின் எல் அமர்னா என்ற இடத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள எழுத்துக்களும், இப்போது ஜெருசலேமில் கண்டறியப்பட்டுள்ள களிமண் துண்டில் உள்ள எழுத்துக்களும் ஒத்திருக்கின்றன.


இந்தக் கண்டுபிடிப்பு மூலம், வெண்கலக் காலம் என்று வரையறுக்கப்பட்டுள்ள கி.மு.,14லேயே ஜெரு சலேம் நகரம் முக்கியத்துவத்தோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்று ஜெருசலேத்திலுள்ள ஹீப்ரு பல்கலையின் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சஞ்சீவ் - bangalore,இந்தியா
25-ஜூலை-201007:22:25 IST Report Abuse
சஞ்சீவ் சந்தோஷம், என்னுடைய தமிழில் கிடைத்த ஆவணங்களை பத்திரமாய் காத்து வைத்துளீர்களா? என்றால் இல்லை என்பர், கல் தோன்றா காலத்தே முன் தோன்றிய எம் தமிழ் மொழியை காப்பதில் நம்முடைய பத்திரிக்கைகளின் பங்கு என்ன? எங்கோ இருக்கும் இஸ்ரேலியர்கள் நமது தமிழையும் சமஸ்கிருதத்தையும் அதன் தொன்மையையும் அறிவார்களா? அறிந்தால் இது போன்று அவர்கள் பத்திரிக்கைகளில் அச்செற்றுவார்களா? ஆனால் இங்கிருந்து அவர்கள் கூறும் பல பொய்களையும் நாம் உண்மை என்று கடைபிடிப்பதை என்னவென்று கூறுவது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X