' காப்பதில் வல்லவர் ' ; சோனியாவுக்கு எடியூரப்பா பாராட்டு சான்று வழங்கினார்

Updated : மே 13, 2012 | Added : மே 13, 2012 | கருத்துகள் (13)
Advertisement
பெங்களூரு : கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து, எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், ஒன்பது பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ""அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்கள் எதுவும் என்னிடம் வரவில்லை,'' என்று, முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பெங்களூரூவில் ஒரு விழாவில் பேசிய எடியூரப்பா ; அரசியலில் தவறு செய்பவர்களை ( அவரது
 Yedurappa support ministers resign

பெங்களூரு : கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து, எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், ஒன்பது பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ""அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்கள் எதுவும் என்னிடம் வரவில்லை,'' என்று, முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பெங்களூரூவில் ஒரு விழாவில் பேசிய எடியூரப்பா ; அரசியலில் தவறு செய்பவர்களை ( அவரது கட்சிக்காரர்களை) சோனியா காப்பாற்றுவார். ஆனால் இது போன்று பா.ஜ.,வில் யாரும் செய்வதில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்தற்கு நானும் ஒரு உதாரணம் . என குறிப்பிட்டார்.
சி.பி.ஐ., விசாரணை உத்தரவுக்குப் பின்னர், தன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் நேற்று, பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, சிலர் எடியூரப்பாவுக்கு ஆலோசனை வழங்கினர். இதற்காக, எடியூரப்பா ஆதரவு அமைச்சர்களான ‌ஷோஷாபா, ரேணுகாச்சார்யா, பசவராஜ் பொம்மை, உதாசி, உமேஷ் கட்டி, சோமண்ணா, முருகேஷ் நிரானி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை, எடியூரப்பாவிடம் கொடுத்துள்ளனர். பெலமகி, ராஜு கவுடா உட்பட மேலும் சில அமைச்சர்கள் அடுத்த கட்டமாக, ராஜினாமா கடிதங்களை கொடுக்கவுள்ளனர்.
தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்பது குறித்து, எடியூரப்பா முடிவெடுக்க அதிகாரம் வழங்கியுள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து, எடியூரப்பாவின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், "எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் ராஜினாமா செய்வது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - Dares Salaam,தான்சானியா
14-மே-201211:43:00 IST Report Abuse
saravanan ஊழல் ஊழலோடு சேர துடிக்கிறது..............
Rate this:
Cancel
Veerasekar - Tokyo,ஜப்பான்
14-மே-201210:43:16 IST Report Abuse
Veerasekar இப்படி பேசினால் சோனியாவின் சிபிஐ உங்களை விசாரிக்காது என்று நினைப்பது பகல் கனவு தான். கொள்ளை அடித்த பணத்தை அரசாங்கதிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து விலகி கொள்ளுங்கள். அதுதான் இந்த நாட்டிற்கு செய்யும் தொண்டு.
Rate this:
Cancel
Kumbalingam Nagarajan - Chennai,இந்தியா
14-மே-201209:08:42 IST Report Abuse
Kumbalingam Nagarajan எடியுரப்பா, சோனியா மற்றும் காங்கிரச்சை பாராட்டுவதன் மூலம் காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி , அங்கே ஊழல் செய்யும் தலைவர்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் உண்டு என்பதை அழகாக சொல்லிவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X