ராணுவ தளபதி எழுதிய கடிதத்தை வெளியிட்ட பெண் அதிகாரி யார்? பகீர் தகவல்

Added : மே 13, 2012 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: இந்திய ராணுவத்தின் மோசமான நிலைகள் மற்றும் போர் குறித்து பிரதமருக்கு ராணுவ த‌ளபதி எழுதிய கடிதங்கள் ஊடகங்களுக்கு அம்பலமான விவகாரத்தில் உயர் பெண் அதிகாரிக்கு தொடர்பிருப்பது அரசு நடத்தி விசாரணையில் த‌ெரியவந்துள்ளது.சர்ச்சைக்குரிய ராணு தலைமை தளபதி வி‌.கே.சிங், விரைவில் ஓய்வு பெற உள்ளார். எனினும் இவர் அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களையும் அவ்வப்போது
 ராணுவ தளபதி எழுதிய கடிதத்தை வெளியிட்ட பெண் அதிகாரி யார்? பகீர் தகவல்

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் மோசமான நிலைகள் மற்றும் போர் குறித்து பிரதமருக்கு ராணுவ த‌ளபதி எழுதிய கடிதங்கள் ஊடகங்களுக்கு அம்பலமான விவகாரத்தில் உயர் பெண் அதிகாரிக்கு தொடர்பிருப்பது அரசு நடத்தி விசாரணையில் த‌ெரியவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய ராணு தலைமை தளபதி வி‌.கே.சிங், விரைவில் ஓய்வு பெற உள்ளார். எனினும் இவர் அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களையும் அவ்வப்போது சில பிரச்னைகளையும் எழுப்பி வந்தார்.மேலும் டாட்ரா வாகனம் வாங்கியதில் நடந்த முறைகேடு குறி்த்தும் சர்சையை கிளப்பினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவத்தில் தளவாடங்கள் மற்றும் வெடி பொருள் பற்றாக்குறை உள்ளதாக பிரதமருக்கு எழு‌திய ரகசிய கடிதத்தில் கூறியிருந்தார். ஆனால் இந்த கடிதம் பத்திரிகையில் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடிதம் வெளியான தகவல் பார்லிமென்டில் பெரும் புயலை கிளப்பியது.இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ராணுவ தளபதி மீது குற்றம் ஏதும் இல்லை என பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.

இதில் பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி எழுதிய கடிதங்கள் அம்பலமான விவகாரத்தில் மத்திய அமைச்சரவையின் இணை செயலர்கள் மட்டத்திலான பெண் அதிகாரி ஒருவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பெண் அதிகாரி ஐ.இ.எஸ்., பிரிவை சேர்ந்தவர் என்றும், அமைச்சரவையின் கீழ் செயல்டும் புலனாய்வுத்துறையை கவனித்துவரும் அந்த பெண் உயர் அதிகாரி தான் பிரதமருக்கு வந்த கடிதங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டது தெரியவந்துள்ளது. சந்தேகப்படும் படியான நபருடன் அவர் பேசியது தெரியவந்ததை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த அதிகாரி மாற்றப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியான விவகாரம் மிகவும் கடுமையானது. இது எனக்கு எதிராக செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ தளபதி விகே சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
14-மே-201211:41:44 IST Report Abuse
TamilArasan பாவம் இந்த ராணு தலைமை தளபதி வி‌.கே.சிங், அவர்களுக்கு ஜால்ரா தட்டல என்பதற்காக காங்கிரஸ் என்ன கொடச்சல் கொடுக்குது இவருக்கு.... தளபதி வி‌.கே.சிங் மக்கள் உங்கள் பக்கம், ராணுவ வீரர்கள் வாழ்க...
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
14-மே-201203:21:30 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஹிஹி ஹி அந்த பெண் எங்க பக்கத்து மாநிலத்தை சேர்ந்த பெண் என்பதும் அறிய முடியாத அளவுக்கு போய் விட்டதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X