தமிழ்நாடு

தொழிற்கடனாக ரூ.59 கோடி: "டிக்'இலக்கு

Added : மே 22, 2012
Share
Advertisement
கோவை : புதிதாக தொழில் துவங்குவோருக்கு, நடப்பு ஆண்டில் தொழிற்கடனாக 59 கோடி ரூபாய் வழங்குகிறது கோவை "டிக்'அலுவலகம்.தமிழகத்தில், தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தி, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையில் "தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்' செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப, பல்வேறு நிதி மானியங்களை, அரசிடம் இருந்து இது பெற்றுத்தருகிறது.கோவைக்

கோவை : புதிதாக தொழில் துவங்குவோருக்கு, நடப்பு ஆண்டில் தொழிற்கடனாக 59 கோடி ரூபாய் வழங்குகிறது கோவை "டிக்'அலுவலகம்.
தமிழகத்தில், தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தி, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையில் "தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்' செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப, பல்வேறு நிதி மானியங்களை, அரசிடம் இருந்து இது பெற்றுத்தருகிறது.
கோவைக் கிளை அலுவலகம் நடப்பாண்டில் (2012 - 2013) 74 கோடி ரூபாய் கடன் அனுமதி பெற்றுள்ளது. இதில், 59 கோடி ரூபாய் கடன் பட்டுவாடா செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங்,ரசாயனம்,மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றவும், புதிதாக தொழில் துவங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது.
தொழில் முனைவோரை, புதிதாக தொழில் துவங்குவோரை ஊக்கப்படுத்த தொழிற்கடன் விழா இன்று(மே 23) டாக்டர் நஞ்சப்பா ரோடு
" டிக்'அலுவலகத்தில் நடக்கிறது.இதில் தலைமை அலுவக துணைப்பொது மேலாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், கடன் சேவைகள் குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X