தமிழ்நாடு

வாகனத்தில் கறுப்பு கண்ணாடிக்கு தடையில்லை: 'பிலிம்' கூடவே கூடாது

Updated : மே 23, 2012 | Added : மே 23, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement
"மோட்டார் வாகனத்தின் கண்ணாடியில், எந்தவகை கறுப்பு நிற பிலிம்களும் ஒட்டக் கூடாது. ஆனால், கார் நிறுவனம் தயாரித்து வெளியிடும், கறுப்பு நிறம் குறைவாக உள்ள கண்ணாடியை பயன்படுத்தலாம்,'' என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்தார்.இது குறித்து, நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: மோட்டார் வாகனத்தின் கண்ணாடியில் எந்தவகை கறுப்பு நிற பிலிம்களும் ஒட்டக் கூடாது.

"மோட்டார் வாகனத்தின் கண்ணாடியில், எந்தவகை கறுப்பு நிற பிலிம்களும் ஒட்டக் கூடாது. ஆனால், கார் நிறுவனம் தயாரித்து வெளியிடும், கறுப்பு நிறம் குறைவாக உள்ள கண்ணாடியை பயன்படுத்தலாம்,'' என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்தார்.

இது குறித்து, நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: மோட்டார் வாகனத்தின் கண்ணாடியில் எந்தவகை கறுப்பு நிற பிலிம்களும் ஒட்டக் கூடாது. கார் நிறுவனத்தினர் தயாரித்து வெளியிடும் கறுப்பு நிற கண்ணாடியை, வாகனத்தில் பயன்படுத்தலாம்.அந்த கறுப்பு நிற கண்ணாடியின் முன், பின் பக்க கண்ணாடியில், 70 சதவீதம் பார்வை தெரியும் வகையிலும், பக்கவாட்டு கண்ணாடியில், 50 சதவீதம் பார்வை தெரியும் வகையில் இருக்க வேண்டும்.

இதில் மாற்றம் இருந்தால் அந்த கண்ணாடியை வாகன ஓட்டிகள் அகற்றிவிட்டு, கோர்ட் விதிமுறைப்படி வேறு கண்ணாடியை பொருத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையில், கண் ணாடிகளில் அடர் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்டிய வாகனங்கள் மீதான அபராத நடவடிக்கையை, போக்குவரத்து போலீசார், நேற்று முன்தினம் துவங்கினர். இரண்டு நாட்களில், விதி மீறிய 6,500 வாகன ஓட்டிகளிடமிருந்து, 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

- நமது நிருபர் குழு -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
24-மே-201207:45:48 IST Report Abuse
கோமனத்தாண்டி தப்பு செய்யறவனை புடிக்க வக்கு இல்லை, அரசியல் வாதிகள் செய்யற ஊழல் . அரசு ஊழியர் அலட்சியம் , பொதுமக்களுக்கு நடக்கும் துரோகம் மற்றும் அவமானம் இது எல்லாம் தினம் தினம் நடக்குது ,
Rate this:
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
23-மே-201214:23:59 IST Report Abuse
KAARTHI இந்த பில்ம்மை அகட்ருவதர்க்கு மூன்று நாட்கள் மட்டுமே கெடுவாகத்தரப்பட்டது. சுமார் ஒருமாத கெடு தருவதில் என்ன சிக்கலோ தெரியவில்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X