லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்களின் வருகைப்பதிவு எப்படி?

Added : மே 24, 2012 | கருத்துகள் (23)
Share
Advertisement
லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்களின் வருகைப்பதிவு எப்படி?

கடந்த மூன்று மாதமாக நடைபெற்ற லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடரில், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நான்கு பேர், சபை நடந்த அனைத்து நாட்களிலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நூறு சதவீத வருகையை பதிவு செய்துள்ளனர்.


அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் தம்பிதுரை, விழுப்புரம் தொகுதி எம்.பி., ஆனந்தன், திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், திருச்சி எம்.பி., குமார் ஆகியோர், பட்ஜெட் கூட்டத்தொடரின் 35 நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். ஆனால், தி.மு.க.,வின் ஒரு எம்.பி., கூட அனைத்து நாட்களிலும், சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அந்த கட்சியில், அதிகபட்ச வருகையை பதிவு செய்தவர், வடசென்னை எம்.பி.,யான டி.கே.எஸ். இளங்கோவன். இவர், 34 நாட்கள் லோக்சபா தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தி.மு.க., எம்.பி.,க்கள் பலர், 11 முதல் 15 நாட்கள் வரை, சபைக்கு "டிமிக்கி' கொடுத்துள்ளனர்.


காங்கிரசில் யார்? அதேநேரத்தில், திருநெல்வேலி எம்.பி.,யான ராமசுப்பு, லோக்சபா நடந்த அனைத்து நாட்களிலும், சபையின் தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வருகையை பதிவு செய்து, தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்களில், அனைத்து நாட்களிலும் சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒரே உறுப்பினர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். கடந்த கூட்டத்தொடர்களிலும் அவர், சபையின் அனைத்து தினசரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜா பட்ஜெட் தொடரில், நான்கு நாட்கள் மட்டுமே சபைக்கு வந்துள்ளார். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா எம்.பி.,க்களில் அதிக நாட்கள் "ஆப்சென்ட்' ஆன உறுப்பினர்கள் விவரம் வருமாறு:கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்)- 11, ஜெ.எம்.ஆருண் (காங்கிரஸ்)- 10, எ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.,)- 15, ஜெயதுரை (தி.மு.க.,)- 13, தொல்திருமாவளவன்- 11, சுகவனம் (தி.மு.க.,)- 10, ஆதிசங்கர் (தி.மு.க.,)- 8, தயாநிதி (தி.மு.க.,)- 8, சிவசாமி (அ.தி.மு.க.,)- 18.


தாமதமாக துவக்கம்: பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக பிப்ரவரியில், ஜனாதிபதி உரையுடன் துவங்கும். இந்த ஆண்டு, உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்ததால், மார்ச் 12ம் தேதி துவங்கியது. தொடரின் முதல் பகுதி, மார்ச் 30 வரை நடந்தது. இரண்டாம் பகுதி, ஏப்ரல் 24ல் துவங்கி, மே 22 தேதியுடன் முடிவுக்கு வந்தது.


குரல் எழுப்பவில்லை: தமிழகத்தில் தற்போது இருந்து வரும் கடுமையான மின் பற்றாக்குறை குறித்து, லோக்சபாவில் உறுப்பினர்கள் வலுவான முறையில் குரல் எழுப்பவில்லை. இதுகுறித்து, லோக்சபாவில் ஒரு முழுமையான விவாதம் நடைபெறவில்லை. ஆனால், கர்நாடக எம்.பி.,க் கள் தங்கள் மாநிலத்தில் இருந்து வரும் கடுமையான வறட்சி குறித்து, ஒரு குறுகிய கால விவாதத்தை சபையில் நடத்தினர். கட்சி பேதமில்லாமல், அந்த மாநில எம்.பி.,க்கள் அனைவரும், இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.


வலுவான வாதங்கள்: நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை குறித்து, கடலூர் எம்.பி., அழகிரி உட்பட, பல உறுப்பினர்கள் பேசினர். கேள்வி நேரத்தில் துணைக் கேள்விகள் மூலமாக, தமிழக பிரச்னைகளை முன் வைக்க, நம் மாநில எம்.பி.,க்கள் முன்வரவில்லை. ஆனால், தத்தம் மாநில பிரச்னைகளை முன்வைத்து, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் எம்.பி.,க்கள் வலுவான வாதங்களை முன்வைத்தனர். தெலுங்கானா பிரச்னை எழுப்பப்பட்டு, சபையின் நடவடிக்கைகள், பல நாட்கள் பாதிக்கப்பட்டன.


- நமது டில்லி நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Ramanathan - Chennai,இந்தியா
25-மே-201218:15:32 IST Report Abuse
Subramanian Ramanathan இந்தியா முழுவதிலும் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்வுக்கான பாராளுமன்றம் முநூற்று அறுபத்தைந்து நாட்களும் நடந்தாலும் ஏழைகளை நடுத்தர மக்களாக மாற்ற முடியாது. அப்படியிருக்கையில் முப்பத்தைந்து நாட்கள் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் அந்த நாட்களிலேயே கலந்துகொள்ள முடியாத மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்களை என்னவென்று சொல்வது. ஆண்டவன் இந்தியர்களை காப்பற்றட்டும்.
Rate this:
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
25-மே-201214:47:58 IST Report Abuse
Appavi Tamilan ஹி ஹி ஹி ....இங்க தமிழகத்துல ADMK மேஜை தட்டி MLA க்கள் எல்லாரும் புதுகையில தெருவுக்கு தெரு ..ரோடு ..டீக்கடை ..பஸ் ஸ்டான்டுன்னு அலையறாங்களே ....கையில ஆயிரக்கணக்கான பணமும்..மூஞ்சில எல்லாம் பல்லுமா...சட்ட சபைக்கே வராம ..அப்பிடியே வந்தாலும் எல்லா எதிர் கட்சி MLA க்களை பச்சை பாட்டிக்கு புடிக்கற மாதிரி அருவருப்பா திட்டி . அதை சபை குறிப்புல வேற பதிவு செஞ்சு...அவங்கள பேசவே விடாம செஞ்சு..... அதப்பத்தி என்ன கருத்து சொல்லலாம்...?
Rate this:
Cancel
Gokul - Bangalore,இந்தியா
25-மே-201213:24:02 IST Report Abuse
Gokul ஏம்பா எங்க தொகுதி MP சுகுமார் பத்தி நியூஸ் காணோம்? அவரு எத்தன நாள் paarliment போனாரு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X