ஜனாதிபதியின் ஒரு நாள் விழாவுக்கு ரூ.23 கோடி செலவு| Show for President Pratibha Patil cost Navy Rs 23 crore | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதியின் ஒரு நாள் விழாவுக்கு ரூ.23 கோடி செலவு

Updated : மே 26, 2012 | Added : மே 24, 2012 | கருத்துகள் (135)
Share
புதுடில்லி: கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக, 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கு, "மினரல் வாட்டர் பாட்டில்' வழங்குவதற்கு மட்டுமே, 12 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சம்பிரதாய நிகழ்ச்சி: இந்திய கடற்படையின் தயார் நிலை மற்றும் தளவாடங்களின் திறன் ஆகியவற்றை, ஜனாதிபதி

புதுடில்லி: கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக, 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கு, "மினரல் வாட்டர் பாட்டில்' வழங்குவதற்கு மட்டுமே, 12 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சம்பிரதாய நிகழ்ச்சி: இந்திய கடற்படையின் தயார் நிலை மற்றும் தளவாடங்களின் திறன் ஆகியவற்றை, ஜனாதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் சம்பிரதாய நிகழ்ச்சி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி மும்பையில் இந்நிகழ்ச்சி நடந்தது. கடற்படையைச் சேர்ந்த, 81 கப்பல்கள், நான்கு நீர்மூழ்கி, 44 கடற்படை விமானங்கள் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதிபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார். இந்த ஒரு நாள், சம்பிரதாய நிகழ்ச்சிக்காக, கடற்படை சார்பில், எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், எஸ்.சி.அகர்வால் என்பவர் கோரியிருந்தார்.

இதற்கு கடற்படையின் மேற்கு கமாண்டரின் தலைமையகம் அளித்துள்ள பதில்:

பிரத்தியேக நாற்காலி: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக மொத்தம், 23 கோடி ரூபாய் செலவானது. விருந்துக்காக, 30 "டைனிங் டேபிள்,' 60 "டைனிங்' நாற்காலிகள், வி.ஐ.பி.,க்கள் அமர பிரத்தியேக நாற்காலிகள் மற்றும் கூலியாட்கள் செலவுக்காக மட்டும், 26 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய் செலவானது. ஜனாதிபதி சார்பில், 960 விருந்தினர்களுக்கு உணவு விருந்து வழங்க, 17 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், போர் கப்பலில் ஜனாதிபதியின் பயணத்துக்காக அழைக்கப்பட்ட 760 பேருக்கு, உணவு வழங்க, 2 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாயும் செலவானது. வந்திருந்த விருந்தினர்களுக்கு தலா, 83 ஒரு லிட்டர் "மினரல் வாட்டர் பாட்டில்'கள் வழங்குவதற்காக மட்டும், 12 லட்சம் ரூபாய் செலவானது. "பிரஷ்'ஷான காய்கறிகள், மளிகை சாமான்களுக்கு, 28 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், ஒட்டு மொத்தமாக பணியாளர்களுக்கு கூலித்தொகைக்கு ஒரு கோடி ரூபாயும் செலவானது.

செயற்கை நீருற்று: நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை விஜயா கார்டனில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்ள, 14 லட்சம் ரூபாயும், "ஆபீஸர்ஸ் மெஸ்' பகுதியில் படிக்கட்டுகளை சீரமைக்க, 14 லட்சம் ரூபாயும், முல்லா ஆடிட்டோரியம் அருகே, புதிதாக செயற்கை நீரூற்று அமைக்க ஆறு லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டது. ஜனாதிபதி வருகைக்காக, பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக மட்டும், 11 கோடியே, 67 லட்சம் ரூபாய் செலவானது. இவ்வாறு கடற்படை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது. பணவீக்கம், விலைவாசி ஏற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு பிரச்னைகளால், பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், சம்பிரதாயத்துக்காக ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சிக்கு, 23 கோடி ரூபாயை வீணடித்திருப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X