பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரயில்பாதை அமைக்க நிதி வசதி இல்லை: ரயில்வே உயர் அதிகாரி தகவல்

Updated : மே 26, 2012 | Added : மே 24, 2012 | கருத்துகள் (10)
Share
Advertisement
இந்தியாவில் அதிவேக ரயில்கள் (புல்லட் ரயில்) இயக்குவது தொடர்பாக, ஆறு இடங்களில் ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன; புதிய ரயில் பாதை அமைக்க, திட்டம் நடைமுறையில் இருந்தபோதும், நிதிப்பற்றாக்குறை உள்ளது என, ரயில்வே வாரியம் பொறியியல் துறை உறுப்பினர் ஏ.பி.மிஸ்ரா தெரிவித்தார். காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில், இந்தியாவின் முதல்

இந்தியாவில் அதிவேக ரயில்கள் (புல்லட் ரயில்) இயக்குவது தொடர்பாக, ஆறு இடங்களில் ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன; புதிய ரயில் பாதை அமைக்க, திட்டம் நடைமுறையில் இருந்தபோதும், நிதிப்பற்றாக்குறை உள்ளது என, ரயில்வே வாரியம் பொறியியல் துறை உறுப்பினர் ஏ.பி.மிஸ்ரா தெரிவித்தார். காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில், இந்தியாவின் முதல் ரயில் கட்டுமானப் பயிற்சி மையம் துவக்கப் பட்டு உள்ளது. ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மையத்தில், ஓராண்டில், 300 தொழில்நுட்ப வல்லுனர்கள், 180 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதி உள்ளது.

பயிற்சி மையம் திறப்பு: நிரந்தர வழிப்பணிகள், ஓவர்ஹெட் மின்மயம், சிக்னலிங், தொலைத்தொடர்பு, நடைமேடைகள், கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே கட்டுமானங்கள் குறித்து, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இம்மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. ரயில்வே வாரிய பொறியியல் துறை உறுப்பினர் ஏ.பி.மிஸ்ரா, பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன், மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, மாதிரி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். "எல் அண்ட் டி' நிறுவன ஆலோசகர் ரங்கசாமி பேசுகையில், ""சிறந்த வல்லுனர்களை உருவாக்குவதற்காக, இம்மையம் துவக்கப் பட்டு உள்ளது. இங்கு, 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், மூன்று வார கால பயிற்சி வகுப்புகள் நடைபெறும்,'' என்றார்.

நிதி பற்றாக்குறை: ரயில்வே வாரியம் பொறியியல் துறை உறுப்பினர் ஏ.பி.மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், 64,400 கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதை உள்ளது. ரயில் பாதை தூரத்தை அதிகப்படுத்த, "விஷன்-2023' திட்டத்தின்படி, ஆண்டுக்கு 2,500 கி.மீ., தூரத்திற்கு, ரயில் பாதை அமைக்க திட்டமிடப் பட்டது. ஆனால், ஆண்டுக்கு 700 கி.மீ., தூரம் வரை மட்டுமே அமைக்கப்படுகிறது. நிதி பற்றாக்குறையே இதற்கு காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, 750 கி.மீ., தூரம் வரை, ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில் பாதை அமைக்க, ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் ரயில் பாதை அமைக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் அதிவேக ரயில்கள் (புல்லட் ரயில்) இயக்குவது தொடர்பாக, மும்பை, ஆமதாபாத், டில்லி உட்பட ஆறு இடங்களில், ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டியில் ரயில் பாதுகாப்பு மற்றும் விபத்து எச்சரிக்கை சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மிஸ்ரா தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arupathy Kalyanam - Mayiladuturai,இந்தியா
29-மே-201222:23:34 IST Report Abuse
Arupathy Kalyanam ரயில்வே விஷன் 2023 மாண்புமிகு மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது வெளியிட்டார்.ஆண்டுக்கு 2500 கி.மீ போடப்படவேண்டும் . தற்போது 700 கி.மீ தான் என்றால் என்ன அர்த்தம்.மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்.தற்போதைய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு முகுல் ராய் அவர்களுக்கு சிறு விண்ணப்பம் .தமிழ் நாட்டில் காவிரி டெல்டாவில் முன்னர் இயங்கிய மாயவரம் - தரங்கம்பாடி 30 கி.மீ மற்றும் திருத்துறைபூண்டி -வேதாரண்யம் 45 கி.மீ இவைகளை இந்த ஆண்டு சிறப்பு திட்டமாக சேருங்கள் .மாண்புமிகு முன்னாள் அமைச்சர் T.R.பாலு 1976 இல் நிறுத்தப்பட்ட நீடாமங்கலம் -மன்னார்குடி பாதையை கொண்டு வந்து நல்லது செய்துள்ளார். அவரும் இந்த திட்டங்கள் இந்த ஆண்டே நடைபெற சிறப்பு நிதி ஒதுக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டுகிறோம். By, ஆறுபாதி ப.கல்யாணம்
Rate this:
Cancel
Raju Rangaraj - erode,இந்தியா
25-மே-201217:18:25 IST Report Abuse
Raju Rangaraj ஒரு லட்சத்து எழுபத்தாராயிரம் கோடி நஷ்டத்தை ஸ்பெக்ட்ரம் வகையில் சாப்பிடுவார்கள்தனிப்பட்ட அரசியல் வாதிகள் நிதி வளம் பெறுவார்கள்ஆனால் நாட்டில் மக்கள் பயனுற திட்டம் போட பணமில்லை என்பது குள்ள நரித்தனமே//ஆதர்ஷ் ஊழல் என போப்படும்காமன்வெல்த் விளையாட்டு நடத்துவதில் விளையாடுவார்கள்இப்போது நிலக்கரி புதிதாக கிளம்பியுள்ளதுபுள்ள ட் ரயில் வேண்டாம்அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை முழுங்கு வார்கள்
Rate this:
Cancel
M. Ashokkumar - Hyderabad,இந்தியா
25-மே-201215:46:08 IST Report Abuse
M. Ashokkumar முந்தைய பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கரம் திட்டம் தொடங்கப்பட்டது. அதே போல இரயில்வே விற்கும் சிறப்பு நிதி ஒதுக்கி வேகமான வளர்ச்சியை அடைய வேண்டும். அப்போதுதான் மக்களின் மோசமான இரயில் பயணங்கள் முடிவிற்கு வரும். செய்வார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X