பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் மன்ற நிர்வாகி போட்டி: ரசிகர் மன்ற பெயரை பயன்படுத்த ரஜினி தடை

Updated : மே 25, 2012 | Added : மே 24, 2012 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: ""புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் ரஜினி மன்ற நிர்வாகி, தேர்தல் பிரசாரத்தில் ரஜினியின் பெயரையோ, மன்றத்தின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது,'' என்று, ரஜினிகாந்த் தடை விதித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலர் ஸ்ரீதர், புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர், ரஜினி மன்ற பெயரிட்ட

சென்னை: ""புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் ரஜினி மன்ற நிர்வாகி, தேர்தல் பிரசாரத்தில் ரஜினியின் பெயரையோ, மன்றத்தின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது,'' என்று, ரஜினிகாந்த் தடை விதித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலர் ஸ்ரீதர், புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர், ரஜினி மன்ற பெயரிட்ட பேனர் மற்றும் கொடியுடன், தேர்தல் பிரசாரம் செய்ய வியூகம் வகுத்து வருவதாக, அங்குள்ள ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலம், சென்னையில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற தலைமைக்கு தகவல் முன்பே தெரிவிக்கப் பட்டுள்ளது.

வாய் திறக்கவில்லை: ஆனால், தலைமை மன்றம் இதுவரை ஏதும் வாய் திறக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையில், ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது, ""ரஜினி மன்ற உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பணியும் செய்யலாம். ஆனால், அவர்கள் ரஜினி பெயரையோ, மன்ற கொடியையோ பயன்படுத்தக் கூடாது என்று, தலைமை ரசிகர் மன்றம் மூலம் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, எல்லா மன்றத்திற்கும் தெரிந்ததே.

குடும்பமே முக்கியம்: ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தை கவனிப்பதைத் தான் முதன்மையாக கருத வேண்டும் என்பதில், ரஜினி அக்கறையுடன் இருக்கிறார். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்த தகவல், பத்திரிகைகள் மூலமாகத்தான் எங்களுக்கு தெரிய வந்தது.தேர்தல் பிரசாரத்தில் ரஜினி பெயரையோ, ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்தி, தேர்தலில் நிற்கக் கூடாது. பிரசாரமும் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துவிட்டோம்,'' என்று தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ள தகவல்கள், ரஜினியின் விருப்பத்தின்படி சுதாகர் மூலம் கூறப்பட்டதாகவே, சென்னையில் ரசிகர்கள் மன்றத் தரப்பில் பேசப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில், ஸ்ரீதர் இன்னும் தேர்தல் பிரசாரத்தை துவக்காததால், அவர் இன்று வாபஸ் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், புதுக்கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

"25 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பலன்': இதுகுறித்து, புதுக்கோட்டை ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலர் ஸ்ரீதர் கூறியதாவது: ரசிகர்களின் விருப்பத்தின்படியும், அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும்படியும் தான், தேர்தலில் நின்றேன். ஆனால், தலைமையிலிருந்து குடும்பத்தை கவனியுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர். எந்த ரஜினி ரசிகர் குடும்பமும் தெருவில் இல்லை என்பதை, தலைமை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த, 25 ஆண்டுகளாக மன்றத்துக்கு உழைத்ததால், கொடியை, ரசிகர் மன்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று, பலன் தந்துள்ளனர். மன்ற நிர்வாகிகளை ஆலோசித்து, தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்வேன். எப்படியிருந்தாலும், தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தானே ஆகவேண்டும். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மே-201213:34:56 IST Report Abuse
Pugazh V தமிழ் படத்தில் நடித்து சம்பாதித்த பணம் மொத்தம் கர்நாடகாவில் முதலீடு செய்து விட்டு, ஒவ்வொரு படம் ரிலீஸ் சமயம், "அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா, அவன் தான் முடிவு பண்ணுவான்" என்று டயலாக் விட்டுக் கொண்டு..வடிவேலு எவ்வளவோ மேல் - சரியோ தவறோ, பிடித்த கட்சியில் சேர்ந்து பிரசாரம் பண்ணி, பின் சரிப்படாத போது ஒதுங்கிக் கொண்டார் குஷ்புவும் தைரியமாக ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டார், இவரால் முடியவே முடியாது..என்றுமே ரசிகர்கள் தான் பாவம், இவர் அரசியலுக்கு வந்தால் கொஞ்சம் காசு தேத்தலாம்னு அலைகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால், அடுத்த மாதமே இவர் வீட்டில் ரெயிடு உறுதி அது தெரிந்து தான் தூரமாக நிற்கிறார்
Rate this:
Cancel
vinoth - puducherry,இந்தியா
25-மே-201212:43:26 IST Report Abuse
vinoth ஜெயாவுக்கு பயந்து ரஜினி போயஸ் தோட்டத்திலிருந்து ஓடினாரா . என்னய்யா காமெடி பண்றிங்க . அவர் ரசிகர்களுக்காக அமைதியா விட்டுட்டார் . . அவருக்கு அரசியல் ஆர்வம் இல்லை . அப்படி இருந்து அவர் அரசியல்ல இறங்கினா தமிழ் நாட்ல வேற கட்சியே ஆட்சிக்கு வராது .
Rate this:
Cancel
koyyaa - oothukuli,இந்தியா
25-மே-201211:21:12 IST Report Abuse
koyyaa எல்லோரும் ரொம்ப புத்திசாலித்தனமா கமெண்ட் எழுதிட்டீங்க போல. என்னொரு தடவ விசயத்த படிச்சு பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X