ஆயு‌தங்கள் கொள்முத‌ல்:கண்காணிப்பு குழுவை நியமித்தார் சிதம்பரம்

Updated : மே 30, 2012 | Added : மே 30, 2012 | கருத்துகள் (22)
Share
Advertisement
ஆயு‌தங்கள் கொள்முத‌ல்:கண்காணிப்பு குழுவை நியமித்தார் சிதம்பரம்

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு ஏதும் நடைபெறாமல் முறையாக நடைபெறுவதற்காக 2 முன்னாள் அதிகாரிகளை கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நியமித்துள்ளார்.

2015 ம் ஆண்டு வரை வாங்கப்படும் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையிலான பாதுகாப்பு தொடர்பான அனைத்து உபகரணங்களையும் வாங்கும் ஒப்பந்தங்களை கண்காணிக்க முன்னாள் பெட்ரோ கெமிக்கல் துறை செயலாளர் எம்.ராமன் மற்றும் முன்னாள் ஆடிட்டர் ‌ஜெனரல் சுனில் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அதிக தொகையில் வாங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்தால் அதிகாரிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


2009ம் ஆண்டு முதல் ரூ.5000 கோடி மதிப்பிலான 90,000 குண்டு துளைக்காத கவசங்கள், 68,000 ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், 16,000 துப்பாக்கிகள், 8 ஹெலிகாப்டர்கள் மற்றும் 118 குறைந்த எடை கொண்ட ஆயுத தாங்கிகள் உள்ளிட்ட ஆயுதம்,வெடிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. மத்திய சுங்கவரித்துறை கழகத்தின்‌ ஆலோசனையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அதிகார்கள் குழுவை நியமித்துள்ளது. இவர்கள் மே 16ம் தேதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான மாத ஊதியம் ரூ.26,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
31-மே-201208:13:36 IST Report Abuse
rajan அண்ணே இந்த மாதிரி எல்லாம் பண்ணுறதுக்கு முன்னாலே தம்பி கருணாவை கலந்தொலோசிதீங்களா. இல்லே இந்த கமிட்டிக்கு சர்காரியா விருதுவை தலைவர போட்ட என்ன நடந்தாலும் நல்ல சமாளிப்பார்ல.
Rate this:
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
31-மே-201205:48:34 IST Report Abuse
K.Sugavanam கண்ணை கட்டுது.ஒடனே வாசன் ஆஸ்பத்திரியில காமிக்கோணும்....ஹி...ஹீ...
Rate this:
Cancel
Dhandapani Shanmugam - riyadh,சவுதி அரேபியா
30-மே-201221:30:27 IST Report Abuse
Dhandapani Shanmugam என்ன போங்க முன்பு ஒரு ஆள் மட்டும் முழுவதும் சாப்பிட்டார், இப்போது கண்காணிப்பு குழு என்று பலருக்கு பங்கு வைக்க வேண்டுமோ? என்ன ஆயுதம் வாங்கினாலும் போர் என்று வந்தால் பக்கத்து நாட்டில் இருந்து ஒரு புல்லை கூட நம்மால் புடுங்கி கொண்டு வரமுடியாது என்று முன்னால் ராணுவ தளபதி கூறி இருந்தது நினைவு இருந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X