தமிழ்நாடு

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மந்தம்

Added : மே 31, 2012
Share
Advertisement
பொன்னேரி: ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், மிகவும் மந்தகதியில் நடைபெறுவதால், அவற்றை துரிதமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.நிதி ஒதுக்கீடுதாலுகா அலுவலக சாலையில், ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி என, இரண்டு விடுதிகள் உள்ளன. அங்கு சுவர்கள் பெயர்ந்தும், மழைக்காலத்தில் விடுதி வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேறமால்

பொன்னேரி: ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், மிகவும் மந்தகதியில் நடைபெறுவதால், அவற்றை துரிதமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நிதி ஒதுக்கீடுதாலுகா அலுவலக சாலையில், ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி என, இரண்டு விடுதிகள் உள்ளன. அங்கு சுவர்கள் பெயர்ந்தும், மழைக்காலத்தில் விடுதி வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேறமால் இருப்பதாலும், அங்கு தங்கி பயிலும் ஆதிதிராவிட மாணவர் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

அதைத் தொடர்ந்து, அங்கு கட்டடப் பணிகளை சீரமைக்கவும், தாழ்வான பகுதிகளில் மண் நிரப்பி சமன்படுத்தவும் என, இரண்டு விடுதிகளுக்கும், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து, பல மாதங்கள்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போது மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொன்னேரியில் நடைபெற்று வரும், ஜமாபந்தியின் நடவடிக்கைகளை திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின் அதே பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் பராமரிப்பு பணிகளை பார்வையிட சென்றார்.

உத்தரவுபராமரிப்பு பணிகள் மிகவும் மந்தகதியில் நடப்பதை கண்டு, அவற்றை துரிதமாக செய்து முடித்திடவும், விடுதி வளாகத்தில் தூர்ந்து போய் கிடக்கும் ஆழ்துளை கைபம்பை அங்கிருந்து அகற்றும்படியும், ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.அவருடன் பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் கந்தசாமி, தாசில்தார் அந்தோணி, துணை தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X