திருவள்ளூர்: பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதால், பல இடங்களில் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இணைப்பு துண்டிப்புதிருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் குறுகிய சந்துகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
ஜே.என்.சாலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பள்ளங்கள் தோண்டப்பட்ட போது, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி கேபிள் இணைப்புகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஆயில் மில் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ""பாதாள சாக்கடைக்காக பள்ளங்கள் தோண்டப்பட்ட போது, பல இடங்களில் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகள் வேலை செய்யவில்லை. சில நேரங்களில் விட்டு விட்டு வேலை செய்கிறது. இதனால், எந்தவொரு அவசரத் தேவைக்கும் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இணையதள சேவையும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
புகார் வரவில்லைஇதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மண்டல பொறியாளர் ராஜேந்திர பாபு கூறும்போது, ""இப்பிரச்னை குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஊழியர்களை அனுப்பி கேபிளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE