பொது செய்தி

தமிழ்நாடு

லாரி ஸ்டிரைக் வாபஸ்: பின்னணி என்ன?

Added : ஜூன் 01, 2012
Advertisement

மதுரை: கர்நாடகாவிற்கு வரும் லாரிகள் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவை, அரசு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. அம்மாநில அரசின் இந்த உத்தரவைக் கண்டித்து, நேற்று (ஜூன் 1) வேலை நிறுத்தத்தில் ஈடுபட, லாரி உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அத்யாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், தன் உத்தரவை தற்காலிகமாக அம்மாநில அரசு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, போராட்டத்தையும் லாரி உரிமையாளர்கள் ஒத்திவைத்தனர்.

மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது : ஒரு லாரிக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த, 17 ஆயிரம் ரூபாய் செலவாகும். மற்ற மாநிலங்களில் இக்கருவியைப் பொருத்த, நிர்ப்பந்தம் இல்லை. கர்நாடகா மட்டும், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதுரையில் இருந்து கர்நாடகாவிற்குள், 50 லாரிகள் செல்கின்றன. லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதால் என்ன பலன்? கர்நாடகா அரசு தனது உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். எங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து தலைமைச் சங்கம் பின்னர் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X