பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கப்பள்ளிகளில் காலி பணியிடம் கல்வித்துறை அதிகாரிகள் சேகரிப்பு

Added : ஜூன் 01, 2012
Advertisement

திருப்பூர்:அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, மாநகர, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.கட்டாய கல்வி சட்டத்தின்படி, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், போதியளவு ஆசிரியர் இன்றி, பெரும் பாலான பள்ளிகளில், ஒரே ஆசிரியர், இரண்டு, மூன்று வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தும் அவல நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது. புதிய கல்விமுறையை முழு அளவில் செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழு வதும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.முதல்கட்டமாக, மாவட்டம்தோறும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் எண்ணிக்கை; ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை; தலைமை ஆசிரியர், ஆசிரியர் காலி

பணியிடங்களை கல்வித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்கப்பள்ளிகள் 863; நடு


நிலைப்பள்ளிகள் 301 உள்ளன. இப்பள்ளிகளில் 112 இடைநிலை ஆசிரியர்; தமிழ் ஆசிரியர் 1; ஆங்கில ஆசிரியர் 22; கணித ஆசியர் 2; அறிவியல் ஆசிரியர் 13; தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் 51; நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 11 என மொத்தம் 212 பணியிடங்கள் காலியாக உள்ளன.மாவட்டம் முழுதும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மொத்த எண் ணிக்கை, காலி பணியிட விவரங்களை சேகரித்து, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்டம்தோறும் பெறப்படும் தொடக்க, நடுநிலைப்பள்ளி காலிப் பணியிட விவரங்களை ஆய்வு செய்து, ஆசிரியர்கள் நியமிப்பது குறித்து கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கட்டாய கல்விச்சட்டம், முப்பருவ தேர்வு முறை அறிமுகத்தை யடுத்து, மாநிலம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அலு வலகம் மூலம், தொடக்க பள்ளிகள் எண்ணிக்கை, ஆசிரியர் காலி பணியிட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மாணவர் - ஆசிரியர் விகிதம் அடிப்படையில், அரசு ஒப்புதல் பெற்று தொடக்க பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X