பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவபுரம் மக்கள் குடிநீர் இன்றி தவிப்பு

Added : ஜூன் 01, 2012
Advertisement

பல்லடம்:மாதப்பூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் மக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீரின்றி தவிக்கின்றனர்.பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் கடந்த 2009ல் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இது, திருப்பூர் மாவட்டத்தின் முதல் சமத்துவபுரம். தறி தொழிலாளிகள், கோழிப்பண்ணை தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.சமத்துவபுரம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. அங்கு வசிக்கும் பொதுமக்கள், பல்லடம் அல்லது மாதப்பூர் சென்று ஒரு குடம் குடிநீர் இரண்டு ரூபாய்க்கு வாங்கி வந்து, தேவையை பூர்த்தி செய்கின்றனர். அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்திலும், மாதப்பூர் சமத்துவபுரம் சேர்க்கப்படவில்லை. இதனால், சமத்துவபுரம் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.மாதப்பூர் ஊராட்சி தலைவர் முத்துரத்தினத்திடம் கேட்ட போது, ""ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் அத்திக்கடவு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர்.""அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்திலும் சமத்துவபுரத்தை அதிகாரிகள் சேர்க்கவில்லை. அத்திட்டத்தில் சமத்துவபுரத்தை சேர்க்கக்கோரி, ஊராட்சி சார்பில், அத்திக்கடவு திட்ட அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரிடமும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X