சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கொலை வழக்கு கோர்ட்டில் இருவர் சரண்

Added : ஜூலை 26, 2010
Share
Advertisement

செங்கல்பட்டு : விவசாயி கொலை வழக்கு தொடர்பாக, இருவர் மதுராந்தகம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

திருத்தணி அடுத்த மேல்கசவராஜபேட்டையைச் சேர்ந்தவர் அங்கையன் (55). விவசாயி. இவருக்கும், திருத்தணியை சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. அங்கையன் கடந்த 17ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். கசவராஜபேட்டை மேல்நிலைத்தொட்டி அருகே நடந்து சென்றபோது. நான்குபேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்தவரை, அருகிலிருந்தவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின் மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி 23ம் தேதி இறந்தார். திருத்தணி போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், திருத்தணி பெரியார் நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஏழுமலை (25), சர்ச் ரோடைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் வினோத்குமார் (24) ஆகியோர் நேற்று காலை மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய வந்தனர்.

நீதிபதி விடுப்பில் சென்றிருந்ததால், பொறுப்பு நீதிபதியான செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிபதி முன் சரணடைந்தனர். நீதிபதி எழிலரசி சரணடைந்த இருவரையும், ஒருவாரம் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X