சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் ஆஜரான இன்ஸ்பெக்டருக்கு கோவை நீதிபதி கடும் எச்சரிக்கை

Added : ஜூலை 27, 2010 | கருத்துகள் (1)
Advertisement

கோவை: கிராஸ் பெல்ட் அணியாமல் சாட்சி சொல்ல கோர்ட்டில் ஆஜரான இன்ஸ்பெக்டர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகும்போதும், கோர்ட்டில் சாட்சி சொல்ல நீதிபதி முன்னிலையில் ஆஜராகும்போதும் போலீஸ் அதிகாரிகள் கிராஸ்பெல்ட் அணிய வேண்டும் என்பது விதி. ஆனால், நேற்று கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கிராஸ் பெல்ட் அணியாமல் ஆஜரானார் பெரியநாயக்கன் பாளையம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்.முழு சீருடை அணியாமல் சாட்சி கூண்டில் ஏறியதை கண்ட நீதிபதி சீனிவாசன் அதிருப்தி அடைந்தார். இது குறித்து ஐ.ஜி.,யிடம் தெரிவிக்கப் போவதாகக்கூறி, உத்தரவை தயாரிக்க உத்தரவிட்டார். சிறிது நேரம் கழித்து, சம்பந்தப்பட்ட வழக்கில், வழக்கமாக ஆஜராகும் ஏட்டு நீதிபதியை சந்தித்து தவறு நடந்து விட்டதாகக்கூறி, அடுத்த முறை முறையாக நடந்து கொள்வதாக தெரிவித்தார்.இதில் திருப்தி அடைந்த நீதிபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். அடுத்த முறை கோர்ட்டுக்கு வரும்போது முழு சீருடையுடன் வரவேண்டும், என எச்சரித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju - Coimbatore,இந்தியா
27-ஜூலை-201012:15:35 IST Report Abuse
Raju I dono why the inspector was left without taking action on him . If a public caught by inspector for not having Driving License at that moment ? whether the inspector will leave him ?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X