சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்துபோக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 27, 2010
Advertisement

வால்பாறை:வால்பாறை அருகே அட்டகட்டி கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வால்பாறையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.வால்பாறையிலிருந்து அட்டகட்டி வழியாக பொள்ளாச்சி செல்லும் மெயின் ரோட்டில் 14 வது கொண்டை ஊசி வளைவுக்கும், 15 வது கொண்டை ஊசி வளைவுக்கும் இடையே நேற்று மாலை 3.15 மணிக்கு ரோட்டின் குறுக்கே மரம் விழுந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தைஅப்புறப்படுத்தினர். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பொள்ளாச்சி -வால்பாறை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகள் கொட்டும் மழையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X