பதிவு செய்த நாள் :
கருத்துகள் (12)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை :அரசு பணம் கையாடல் புகாரில் சிக்கிய, தமிழக சட்டசபையின் முன்னாள் செயலர், செல்வராஜ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். தமிழ்நாடு சட்டபை செயலராக, கடந்த ஆட்சியில் பணியாற்றியவர் செல்வராஜ். பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு, 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு (எக்ஸ்டன்சன்) வழங்கப்பட்டது. சட்டசபை செயலர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பணியிடத்தில் இருந்த செல்வராஜ், அரசு பணத்தை, முறைகேடாக செலவு செய்ததாகவும், முறைகேடு பணத்தை அவருடைய சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.
சிக்கிய ஆதாரம்:இந்த புகார் குறித்து, விசாரணை நடத்த, அரசு உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., குணசீலன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., சண்முகம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அரசு பணத்தை, முறைகேடாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கின.
4 முறைகேடுகள்:செல்வராஜின் மகன் ஜெகநாத், டில்லியில் வேலை செய்கிறார். சட்டசபை செயலர் பணியில் இருந்த செல்வராஜ், டில்லியில் அரசு தொடர்புடைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக, விமானத்தில், அரசு செலவில், இரண்டு முறை டில்லி சென்று, மகனை பார்த்து வந்தார். செல்வராஜ் டில்லிக்கு சென்ற நேரத்தில், அரசு தொடர்பான கூட்டம் நடைபெறவில்லை. இதனால், அரசுக்கு 75 ஆயிரம் ரூபாய், இழப்பு ஏற்படுத்தியதற்கான ஆவணங்களை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சேகரித்தனர்.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில், எம்.எல்.ஏ.,க்களை தவிர, தனியார்களுக்கு கட்டண அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நடைமுறையை கடைபிடிக்காமல், தனியார்களுக்கு அறை ஒதுக்கியதால், அரசுக்கு, 1.90 லட்ச ரூபாய், இழப்பு ஏற்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.
சட்டசபை செயலர் செல்வராஜின் கீழ், 8 அரசு கார்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. செல்வராஜ் அவரது பழுதடைந்த காரை, அரசு "ஒர்க்ஷாப்பில்' ஒப்படைக்காமல், தனியாரிடம் கொடுத்து, பழுதி

நீக்கியுள்ளார். வேலைக்கான செலவு, 6 ஆயிரத்திற்கு, செல்வராஜ், 25 ஆயிரம் ரூபாய், அரசு பணத்தை ஒதுக்கியுள்ளார். தனியார் ஏற்படுத்திய இந்த மறைமுக நெருக்கத்தால், தனியார் கார்களை, அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார். போலி "பில்':சட்டசபை நூலகத்தில் உள்ள இரும்பு
மற்றும் மர அலமாரிகளை பழுது நீக்கி, அவற்றிற்கு பெயின்ட் அடிக்கும் ஒப்பந்தத்தை, அவருக்கு நெருக்கமான அமலதாஸ் என்பவருக்கு, செல்வராஜ் கொடுத்தார். அந்த பணிகளுக்கான "ஒர்க் ஆர்டரை' வெள்ளிக்கிழமை கொடுத்துள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை. திங்கள் கிழமை அப்பணிகளை முடித்து விட்டதாக கூறி, செலவுத் தொகையாக, 3.90 லட்ச ரூபாய்க்கான, பில்களை தயாரித்து, நிதித்துறைக்கு, செல்வராஜ் அனுப்பினார். சட்டசபை தேர்தல் நேரமாக இருந்ததால், அந்த பில்கள், தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பப்பட்டன. தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட, இப்பணியை ஏற்க முடியாது என, தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., பொறுப்பேற்றவுடன், முறைகேடாக "போலி பில்' தயாரித்த விவகாரம் அரசின் பார்வைக்கு சென்றது. இவ்விவகாரத்தில், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படா விட்டாலும், "போலி பில்'தயாரித்த விவகாரத்தில், செல்வராஜ் சிக்கிக் கொண்டார்.
வழக்கு பதிவு:இந்த நான்கு முறைகேடுகளில்,

Advertisement

செல்வராஜுக்கு உடந்தையாக, சட்டமன்ற செயலக குழு தலைவர் சிங்காரவேலு, சட்டமன்ற பிரிவு அலுவலர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற சட்டசபை இணைச் செயலர்இந்திரா ஆகியோர் மீது, கடந்த 2ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி.,க்கள் சண்முகம், திருநாவுக்கரசு மற்றும் பல இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று, செல்வராஜ் வீட்டில்,அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.


எங்கெங்கு சோதனை?சென்னை ஷெனாய் நகர், பிரேவரி சாலை, மங்களம் அடுக்குமாடி குடியிருப்பில், மனைவி சிவகாமி, மகள் அனுஷாவுடன் செல்வராஜ் வசிக்கிறார். டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் சென்ற இன்ஸ்பெக்டர்கள், அவரது வீட்டில், நேற்று காலை, சோதனை நடத்தினர். செல்வராஜும் அவரின் மனைவியும் வீட்டில் இருந்தனர். சோதனையில், 33 முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.சென்னை அயனாவரம், சோலையம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சட்டமன்ற குழு தலைவர் சிங்காரவேலுவின் வீட்டில் சோதனை நடந்தது. சென்னை பம்மல், எல்.ஐ.சி., காலனி, 6வது இணைப்பு என்ற பகுதியில் வசித்து வரும், சட்டமன்ற செயலகத்தின் பிரிவு அலுவலர், பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடந்தது. சென்னை மேற்கு மாம்பலம், உமாபதி தெருவில், சாய் சக்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சட்டமன்ற செயலகத்தின் இணை செயலர் (ஓய்வு), இந்திரா வீட்டிலும் சோதனை நடந்தது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-201221:52:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஹ, ஹ, ஹ,,,ஹ,ஹா... Penny wise, pound foolish... ஆனால், இவரும் மம்மியைப் போல வாய்தா வாங்காமல், இன்னும் 20 வருடங்களில் வழக்கை முடிப்பாரா என்பது சந்தேகமே. அது சரி, சங்கரன்கோவிலில், புதுக்கோட்டையில் மாதக் கணக்கில் மங்குனி அமைச்சர்கள் அத்தனை பேரும், அவர்களை பல்லக்கு தூக்க அரசு அதிகாரிகள் நூற்றுக்கணக்கான பேரும், இரண்டு மாதங்கள் முகாமிட்டு, மம்மி ஓட ஓட விரட்டி, ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு பொறுக்கினார்களே ?? அரசுச் செலவில் தண்டமாக செலவான அந்த கோடிக்கணக்கான செலவுக்கு யாரைத் தொங்கவிடலாம்...?? மம்மியையா ? அமைச்சர்களையா ?? அரசு அதிகாரிகளையா ??
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
04-ஜூலை-201217:49:38 IST Report Abuse
K Sanckar திமிங்கிலம் எல்லாம் விடப்பட்டு சின்ன சின்ன மீன்கள் பிடிபடுகின்றனவே? இது என்ன ரஜனி டயலாகில் ஜிஜுபி
Rate this:
Share this comment
Cancel
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூலை-201214:29:37 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. இந்த லஞ்ச ஒழிப்பு துறையே தேவையில்லை என்பது என் கருத்து.இவர்கள் எத்தனை பேரை பிடித்து இதுவரை தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்கள். மலையை முழுங்கி ஏப்பம் விட்டவனை எல்லாம் வெளியில் திரிகிறான். பாருங்கள் இன்றைக்கு கூட ஒரு போராட்டம் நடக்கிறது. எதற்கு? யாராவது இளிச்சவாயன் மாட்டினால் நல்ல நொங்கு எடுப்பபார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arasan - chennai,இந்தியா
04-ஜூலை-201214:24:07 IST Report Abuse
Arasan இதில் ஏதோ மர்மம் இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
04-ஜூலை-201212:10:50 IST Report Abuse
maran ஆஹா நல்லா என் போட்டோவை தினமலரை போட்டோ எடுத்து போட்டு விட்டது என பல்லை - காட்டுகிறான் பாரு .....உன்னை எல்லாம் மக்கள் மாட்டு சாணத்தால் மூஞ்சியில் வீச போராங்கடா ...செய்தது பிராடு ....போஸ் கொடுக்கிறீர்களோ ?உழைத்து சாப்பிடவேண்டியதுதானே .......
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
04-ஜூலை-201210:44:39 IST Report Abuse
Dhanabal மலையை கிள்ளி எலியை பிடித்த கதையாக ,கோடிகளில் நடக்கும் ஊழல்கள் எத்தனையோ இருக்கும் போது அவை கண்டு கொள்ளப்படாமல் ,லட்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஊழல் ஒழியாது மாறாக வளர்ச்சி அடையவே செய்யும்..
Rate this:
Share this comment
Cancel
Charles - Toronto,கனடா
04-ஜூலை-201210:17:24 IST Report Abuse
Charles What about the Secretaries of Ex-Transport Minister? Are they clean? Wherefrom they have such blatent accumulation of properties and wellries? Probe must be done on wealth of all ex-secretaries..I hope CM will order these probes expeditiously...
Rate this:
Share this comment
Cancel
nagaraj - madurai ,இந்தியா
04-ஜூலை-201209:00:09 IST Report Abuse
nagaraj பாவம் இவர்கள்....கடந்த தி.மு.க ஆட்சியில்.......ஜெயலலிதா சட்டசபைக்குள் பேட்டி அளிக்க வேண்டாம் என்று சொன்ன காரணத்துக்காக.........கழக ஆட்சிகளின் சண்டைக்கு நடுவே.......அரசு ஊழியர்கள்....சிக்கிக் கொள்கிறார்கள்.........
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
04-ஜூலை-201204:15:10 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே என்னங்க ஏதோ லட்சம் கோடியில இருக்கும்னு நெனைச்சு படிச்சா, சப்புன்னு இருக்கு. ஆமா எதுக்கு மொகத்த தொங்க போட்டுக்கிட்டு போறீங்க? ஆயிரம்/லட்சம் கோடி ஊழல் பண்ணவன்களே சிரிசிகிட்டு நான் பண்ணல அப்படீன்னு போசு கொடுக்குறாங்க?, ஒஹ், உங்களுக்கு வெக்கம் மானம், இருக்குன்னு நெனைக்குறேன். .................
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
04-ஜூலை-201200:20:40 IST Report Abuse
Thangairaja ரிடையர் ஆன பிறகு தான் பிடிப்பார்களா....? பதவிக்கா லத்திலேயே நடவடிக்கை எடுத்தால் மற்ற அதிகாரிகள் பயப்படுவார்கள். பொதுமக்களும் லஞ்சம் கொடுப்பதிலிருந்து தப்பிக்கலாம், அரசு பணமும் விரயமாகாது.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
04-ஜூலை-201208:48:47 IST Report Abuse
Karam chand Gandhi அரசாங்கத்தில் வேலை பார்க்கிற லஞ்சம் வாங்காத நாய் கூட இல்லை என்றே தோன்றுகிறது. மானம் கெட்ட வெட்கங்கெட்ட ஜென்மங்கள். வெட்கம் மானம் உள்ளவர்களா மக்களை மாற்றுங்கள். இல்லையெனில் கேனிபாலிஷம் உருவாகிவிடும்....
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
04-ஜூலை-201209:10:16 IST Report Abuse
Karam chand Gandhi உயர் அதிகாரிகள் ,லஞ்சமே வாங்க மாட்டோம் அப்படின்னு முடிவு பண்ணி அவர்கள் சங்கம் மூலமாக பொய் வழக்கு எந்த அதிகாரி மீது போட்டாலும் போராடுவோம் என்று முடிவு செய்தால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X