பொது செய்தி

இந்தியா

அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்

Added : ஜூலை 03, 2012 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : கடந்த 1998ம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போது, அப்துல் கலாமை அமைச்சராக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார். ஆனால், அவரின் அழைப்பை கலாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக, "டர்னிங் பாயின்ட்' என்ற தன் புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளதாவது:நான், கடந்த 2002ல், ஜனாதிபதியானேன். அதற்கு முன்னதாக, 1998ம்
அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்,Vajpayee wanted to induct Kalam as minister in NDA govt: Book

புதுடில்லி : கடந்த 1998ம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போது, அப்துல் கலாமை அமைச்சராக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார். ஆனால், அவரின் அழைப்பை கலாம் ஏற்றுக் கொள்ளவில்லை.


இதுதொடர்பாக, "டர்னிங் பாயின்ட்' என்ற தன் புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளதாவது:நான், கடந்த 2002ல், ஜனாதிபதியானேன். அதற்கு முன்னதாக, 1998ம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்த போது, என்னை அமைச்சராக்க, வாஜ்பாய் விரும்பினார். 1998 மார்ச் 15ம் தேதி, நள்ளிரவில், வாஜ்பாய் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அமைச்சர்கள் பட்டியலை தான் தயாரித்துள்ளதாகவும், என்னை அமைச்சராக்க விரும்புவதாகவும் கூறினார். உடன், "நான் யோசிக்க அவகாசம் கொடுங்கள்' என, கேட்டுக் கொண்டேன். உடன் அவர், என்னை மறுநாள் காலை 9.00 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார்.


நண்பர்களுடன் ஆலோசனை:உடனே நான், அந்த இரவிலேயே, என்னுடைய நண்பர்கள் சிலரை அழைத்துப் பேசினேன். வாஜ்பாய் விடுத்த அழைப்பு குறித்து, அவர்களுடன் விவாதித்தேன். அதிகாலை மூன்று மணி வரை இந்த விவாதம் நடைபெற்றது. அப்போது என்னுடைய நண்பர்கள் எல்லாம், "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு திட்டங்களில் நான் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், அவை எல்லாம் முன்னேற்றமான நிலையில், நல்ல பலன் தரக்கூடிய நிலையில் இருப்பதால், அப்போதைக்கு அமைச்சர் பதவியை ஏற்க வேண்டாம். அரசியலுக்கு செல்ல வேண்டாம்' என, கேட்டுக் கொண்டனர்.


வாஜ்பாயுடன் சந்திப்பு :அடுத்த நாள் காலை, நான், வாஜ்பாய் தங்கியிருந்த நம்பர்.7, சப்தர்சங் சாலை வீட்டிற்கு சென்றேன். அவரிடம், "நானும், என்னுடைய குழுவினரும், இரண்டு முக்கியமான திட்டங்களில் பங்கேற்றுள்ளோம். அதில், ஒன்று, அக்னி ஏவுகணை தயாரிப்பு திட்டம் மற்றும் அணுகுண்டு தயாரிப்பு திட்டம். இந்த இரண்டு திட்டங்களிலும் நான் முழு நேரமும் ஈடுபட வேண்டும் என, நினைக்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும். அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவித்தேன். நான் சொன்னதை ஏற்றுக் கொண்ட வாஜ்பாய், "என்னுடைய பணியைத் தொடரும்படி கூறினார். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்' என்றும் வாழ்த்தினார்.


நாட்டிற்கு பலன் :வாஜ்பாய் என்னை அமைச்சராக்க விரும்பிய நேரத்தில், நான் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தேன். அமைச்சர் பொறுப்பை ஏற்க மறுத்ததால், இரண்டு பெரிய திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன்மூலம், நாட்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பின் பல விஷயங்கள் வேகமாக நடந்தன. அக்னி ஏவுகணை தயாரானது. தொடர்ச்சியாக ஐந்து அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்மூலம், அணுஆயுத நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றது.


துணைவேந்தர்:இதுமட்டுமின்றி, ஒரு முறை, தமிழக கவர்னர் சென்னா ரெட்டியும், என்னை அழைத்தார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகும்படி கேட்டுக் கொண்டார். எனது நியமனத்திற்கு அங்கீகாரம் அளிக்கும்படியும் அரசை கேட்டுக் கொண்டார். ஆனால், அப்போதைய பிரதமரான நரசிம்மராவ், பல முக்கிய திட்டங்களில் நான் பங்கேற்றிருந்ததால், என்னை அறிவியல் ஆலோசகராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NavaMayam - New Delhi,இந்தியா
04-ஜூலை-201204:17:43 IST Report Abuse
NavaMayam சாமியார் கொடுத்தார் என்று தங்கம் விலைக்கு கவரிங் நகைகளை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, ரோட்டில் கிடந்து எடுத்த சொக்க தங்கத்தை உரசி பார்கிறீர்களே ..
Rate this:
Cancel
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-201201:51:54 IST Report Abuse
kalaignar piriyan பா ஜா க உறுப்புட ஒரு வழி சொல்லுகிறேன், அய்யா கலாமை அந்த கட்சிக்கு தலைவர் ஆக்குங்கள். அவரை பிரதமர் வேட்பாளராக வழி மொழியுங்கள் அப்போ தான் அவரால் உண்மையிலயே நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் சும்மா ஒண்ணுக்கும் உதவாத ஜனாதிபதி பதவி அவருக்கு வேண்டாம். மக்கள் விரோத காங்கிரசுக்கும் ஆப்பு அடிக்க முடியும், பா ஜா க விற்கும் மதவாத கட்சி என்ற அவ பெயர் நீங்கும். தயவு செய்து எனது இந்த கருத்தை ஆதரிக்கவும்.
Rate this:
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
04-ஜூலை-201205:03:52 IST Report Abuse
s.maria alphonse pandianநடக்கிற காரியத்தை சொல்லவும்...ஏற்கனவே அங்கு மோடியா?அத்வானியா ? என்று போர் நடந்து கொண்டிருக்கிறது...ஜெயாவை பிரதமர் பெயருக்கு முன் மொழிவார்கள்...சங்மாவை குடியரசு தலைவர் பதவிக்கு முன் மொழிந்ததை போல.......
Rate this:
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
04-ஜூலை-201201:49:54 IST Report Abuse
குடியானவன்-Ryot APJ அப்துல் கலாம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து என்ன செய்தார் என்று அவர் எழுதிய "Turning Point And Journey Through Challenges" என்ற புத்தகத்தில் பல உண்மைகளை நாட்டுமக்களுக்கு சொல்லியுள்ளார். இவர் இருந்த 6 ஆண்டுகளில் ராஜீவ் காந்தி கொலையாளிகளாக குற்றம் சாட்டப்படவர்களின் கருணை மனுவை பரிசிலிக்கவில்லை, 2005 ஆண்டு நிதிஷ் குமாரின் பீகார் அரசை கலைக்க ரஷ்யாவில் இருந்தபடியே fax அனுப்பினார், சோனியா விருப்பம் தேரிவித்திரிந்தால் அவருக்கு பதவி பிரமாணம் செய்வதை தவற வேறு வழி இல்லை என்று கூறியது போன்ற செயல்பாடுகளை பார்க்கும்போது இவரும் மற்ற ஜனாதிபதிகளை போன்று தான் செயலப்பட்டுள்ளார். எனவே இந்திய ஜனாதிபதி பதவி என்பது ஒரு தலையாட்டி பொம்மை போன்றது தான் என்பது புலப்படுகிறது...  
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X