பொது செய்தி

இந்தியா

"2ஜி': பார்லி கூட்டு குழு சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், சிதம்பரம்

Updated : ஜூலை 04, 2012 | Added : ஜூலை 03, 2012 | கருத்துகள் (6)
Share
Advertisement
Vajpayee, PC in witnesses list before JPC probing 2G scam,"2ஜி': பார்லி கூட்டு குழு சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், சிதம்பரம்

புதுடில்லி:"2 ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டு குழு முன், நேற்று சாட்சிகளாக அழைத்து விசாரிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் முன்வைக்கப்பட்டது. அதில், வாஜ்பாய், சிதம்பரம் உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க, நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. அப்போது, சாட்சிகளாக யார், யாரை அழைத்து விசாரிக்கலாம் என்பது தொடர்பாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்த யோசனை அடிப்படையில், தயாரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் ஒன்றை முன்வைத்தார். இதில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர்கள் ராஜா, ஜக்மோகன், அருண்÷ஷாரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

விசாரணை:சாக்கோ கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், யாரை எல்லாம் அழைத்து, சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யவில்லை. இதுபற்றி குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான், சாட்சியாக யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என்பது பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும்' என்றார்.

அப்போது, சாட்சிகள் பெயரில், வாஜ்பாய் பெயர் இடம்பெற்றிருந்ததற்கு, குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ.,வை சேர்ந்த யஷ்வந்த் சின்கா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். "வாஜ்பாய் அழைக்கப்படும் பட்சத்தில், பிரதமர் என்ற முறையில், மன்மோகன் சிங்கும் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும்' என்றார்.

இருந்தாலும், யார் யாரை அழைப்பது என்பது தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் 10ம் தேதி, கூட்டுக் குழு கூடும் போது, முடிவெடுக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Garan - puducherry,இந்தியா
04-ஜூலை-201215:41:25 IST Report Abuse
Sathya Garan வாஜிபை ஒரு நல்ல மனிதர். ச்பெக்ட்ரும்கும் அவருக்கும் சமந்தம் இருக்காது
Rate this:
Cancel
Kali Raja - Thane,இந்தியா
04-ஜூலை-201210:42:46 IST Report Abuse
Kali Raja தேரை இழுத்து தெருவில் விடுவதுபோல இருக்கு
Rate this:
Cancel
sivakumar - Chennai,இந்தியா
04-ஜூலை-201210:14:08 IST Report Abuse
sivakumar எவ்வளவோ நாட்களுக்கு பின் வாஜ்பாயி பெயர் பத்திரிகையில் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X