அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு தேவை அதிர்ச்சி வைத்தியம்: அதிரடியை துவக்குவாரா முதல்வர்?

Updated : ஜூலை 04, 2012 | Added : ஜூலை 03, 2012 | கருத்துகள் (8)
Share
Advertisement

முதல்வரின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பலரின் ஆட்டம் அடங்கியுள்ளது. அதேபோன்ற அதிர்ச்சி வைத்தியம், கோவை மாநகராட்சிக்கும் தேவைப்படுகிறது. முறைகேடு, அடாவடி செயல்களை ஆரம்ப நிலையிலேயே ஒடுக்க, முதல்வர் ஜெயலலிதா அதிரடியை துவக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, பல தரப்பிலிருந்தும் எழுகிறது.

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்களை சமீபத்தில் எச்சரித்த முதல்வர் ஜெயலலிதா, "அடாவடியில் ஈடுபடுவதாக புகார் வந்தால் மாநகராட்சி கவுன்சிலை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்துவேன்' என, வெளிப்படையாக எச்சரித்தார். மிரண்டுபோன கவுன்சிலர்களும், அ.தி.மு.க., பிரமுகர்களும், தங்கள் மீது எந்தவொரு புகாரும் தலைமைக்கு போய்விடாதபடி, மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

கோவைக்கும் தேவை:சென்னை மாநகராட்சிக்கு அளித்ததை போன்ற, அதிர்ச்சி வைத்தியம் கோவை மாநகராட்சிக்கும் தேவைப்படுவதாக, கவுன்சிலர்கள் சிலர், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில், தற்போதைய கவுன்சிலில் இடம் பெற்றுள்ளவர்கள் பதவிக்கு வரும் முன் என்ன தொழில் செய்தனர், அப்போதைய சொத்து எவ்வளவு, பதவிக்கு வந்தபின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விபரங்களை விலாவரியாக மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அ.தி.மு.க., தலைமை, ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. கவுன்சிலர்களின் அத்துமீறல், அடாவடியான செயல், குற்ற பின்னணி குறித்த விபரங்களை உளவுப் போலீசார் திரட்டி வருகின்றனர். இதையறிந்த கவுன்சிலர்கள், எச்சரிக்கையாக உள்ளனர்.

இணைப்பில் முறைகேடு:மாநகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்ட வார்டுகளில் குடிநீர், சாக்கடை இணைப்புகள் கிடைக்க தாமதமாகின்றன. புதிய வார்டு கவுன்சிலர்கள் சிலர், "பிளம்பர்களை' கைக்குள் போட்டுக் கொண்டு, முறைகேடாக குடிநீர் இணைப்பு அளித்து, பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கவுன்சிலர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது.

வியாபாரிகளிடமும் வசூல்:மாநகராட்சி மற்றும் கட்சியில் பதவி வகிக்கும் "காந்திபுரம் தம்பதியரின்' அத்துமீறல்கள் தாங்க முடியவில்லை என, அப்பகுதி வியாபாரிகள் புலம்புகின்றனர். பெரிய கடைகள் என்றால் கட்சியின் பெயரில் நிதி வசூலிப்பு, சாலையோர கடைகள் என்றால் மாதாந்திர மாமூலாக தலா 1,000 ரூபாய் என, வசூலிப்பதாக, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரே கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

குப்பைத்தொட்டிக்காரர்:"ரத்தினபுரிகாரருக்கு' நான்கு வார்டுகள் தள்ளி இருக்கும், "மலர் கட்சி' கவுன்சிலரோ சிரித்தவாறே அடாவடியாக சம்பாதிப்பதில் வல்லவர். தனக்கு கப்பம் கட்டாமல் வீடு கட்டுபவர்களின் வீட்டின் முன் குப்பைத்தொட்டியை வைத்து, அள்ளாமல் விட்டு மிரட்டுவது இவரது ஸ்டைல். "லே-அவுட்' பிரிக்கும் இடங்களுக்கு தன்னை கேட்காமல், "என்.ஓ.சி' அளிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவும் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது அடாவடி காரணமாக, வார்டில் வளர்ச்சிப் பணி மேற்கொள்ள கான்ட்ராக்டர்கள் தயங்குகின்றனர்.

"பெட்டி'க்காரர்:தனது வார்டில் பொதுமக்களிடம் இருந்து புகார் பெற பெட்டிகள் வைத்து, முதல்வரின் கவனத்தை கவர முயற்சிக்கும் "மணியான' பெண் கவுன்சிலர், கான்ட்ராக்டர்களிடம் தனது வசூல் பெட்டியை காண்பித்து பணம் கறந்துவிடுவதாக, கட்சியினர் புலம்புகின்றனர்.

கட்டப்பஞ்சாயத்து:"சகோதரி'யின் பெயரில் பாதியை தனது பெயருடன் வைத்துள்ள கவுன்சிலர் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர், டாஸ்மாக் மதுக்கடை பார் உரிமம் பெற்று அதிலும் சம்பாத்தியம் பார்த்து வருவதாகவும், வார்டு பிரச்னைகளை கண்டுகொள்வதில்லையென்றும் கூறப்படுகிறது.

கவுன்சிலர்கள் "நலம்':தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டமானாலும் சரி, ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் பி.எஸ்.யு.பி., திட்டம் ஆனாலும் சரி, சில வார்டுகளில் கமிஷன் வந்தால்தான், "டோக்கன்' கிடைக்கிறது. இலவச வீடு வழங்கும் திட்டத்திலோ, வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கட்டாய கலெக்ஷன் நடக்கிறது. புது கவுன்சிலர்கள் இதில் புகுந்து விளையாடுகின்றனராம்.

15 சதவீத கமிஷன்:வார்டுகளில் எந்த வளர்ச்சிப்பணி நடந்தாலும் தங்களுக்கு 15 சதவீத கமிஷன் வந்து விடவேண்டும் என்று பல கவுன்சிலர்கள் எழுதப்படாத சட்டமே போட்டுள்ளனர். "மாநகர மேலிடத்தில்' கமிஷனை அளித்துவிட்டு வரும் கான்ட்ராக்டர்கள், கவுன்சிலர்களுக்கும் கொடுத்துவிடுகின்றனர். கவுன்சிலர்களில் பலரும், பல "லகர'ங்களை "செலவிட்டு' பதவிக்கு வந்தவர்கள் என்பதால், முதலீட்டுக்கும் அதிகமான பல மடங்கு தொகையை பார்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். பினாமிகள் பெயரில் கான்ட்ராக்ட், டாஸ்மாக் "பார்' லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

இதெல்லாம் ஒரு "சாம்பிள்தான்':மேற்கண்ட விபரங்கள் எல்லாம், கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது எழுந்துள்ள புகார்களின் சாம்பிள்தான். மேலும் பலர் மீதான முறைகேடுகள் குறித்த விபரங்கள், கட்சி பிரமுகர்கள் சிலர் மூலமாக, தலைமைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

கோவைக்கு எப்போது?கவுன்சிலர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களின் முறைகேடு மற்றும் அடாவடிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஒழித்தால்தான், அரசுக்கு நற்பெயர் ஏற்படும். நம்பி ஓட்டளித்த வாக்காளர்களின் நம்பிக்கையும் நிலைக்கும். இல்லாவிடில், கோவை மாநகராட்சியின் நிலையும், சென்னை மாநகராட்சி அளவுக்கு போய்விடும். அதற்கு வாய்ப்பு அளிக்காமல், ஆரம்ப நிலையிலேயே கண்டிக்க வேண்டும். இந்நடவடிக்கையை முதல்வர் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் மட்டுமல்ல, ஆளுங்கட்சி வட்டாரத்திலும் நிலவுகிறது; வருமுன் காப்பதே, அரசுக்கு அழகு.

மேயர் விளக்கம்:கவுன்சிலர்கள் மீதான புகார் குறித்து கோவை மாநகராட்சி மேயர் வேலுச்சாமி யிடம் கேட்டபோது, ""எந்த ஒரு முறை கேட்டிலும் ஈடுபடக் கூடாது என கவுன் சிலர்கள் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள் ளனர்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - theni,இந்தியா
05-ஜூலை-201206:00:16 IST Report Abuse
sam நீங்களா போட்டுக்க வேண்டியது தான் அதிரடி அதிரடின்னு. கோடநாட்டுல உக்காந்துட்டு திமுகவ பழிவாங்குறத தவிர வேற ஒண்ணுமே உருப்படியா பண்ணலே.
Rate this:
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
04-ஜூலை-201204:08:40 IST Report Abuse
NavaMayam ஊழல் செய்திகளில் மட்டும் அம்மா படத்தை போட்டு மானத்தை வாங்க வேண்டுமா... அம்மா அதிர்ச்சி வைத்தியமா செய்கிறார்... நோயை குனபடுத்த தெரியாமல் , தான் போலி டாக்டர் என்பது தெரிந்து விடுமோ என்று அதிர்ந்து போய் உள்ளார் ..
Rate this:
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
04-ஜூலை-201203:53:19 IST Report Abuse
NavaMayam தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் .. நீதி மன்றங்களில் இந்த நீதி கிடைக்கிறதோ இல்லையோ .. மக்கள் மன்றத்தில் இது உண்மையாகி விட்டது .., ஒரு ஓட்டை மாற்றி குத்திய தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X