நியூயார்க்: அமெரிக்க பார்லிமென்ட்டின் ஓரினசேர்க்கை எம்.பி. ஒருவர் தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்டார். இதில் மாகாண கவர்னர் உள்பட முக்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.அமெரிக்க பார்லிமென்ட்டாக காங்கிரஸ் சபையின் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக உள்ளவர் பெர்னிபிராங்க் (71). இவரின் நீண்ட நாள் நண்பராக உள்ள ஜிம்ரெய்டி(42) என்பவரும் , ஓரினசேர்க்கையாளர்களாக இருந்து உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் நேற்று திடீர் திருமணம் செய்து கொண்டனர். இவ்விழாவில் , காங்கிரஸ் சபையின் ஜனநாயக கட்சியின் பெரும்பான்மை தலைவர் நான்சிபெலோசி, சென்ட் உறுப்பினர் ஜான்கெர்ரி, மாஸிசூசஸ் மாகாண கவர்னர் தேவால் பாட்ரிக் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பார்லிமென்ட் எம்.பி. ஒருவர் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டதாக பூஸ்டன் குளோப் என்ற பத்திரிகைய செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE