மக்கள் விரும்பினால் மன்னராட்சி: நேபாள் முன்னாள் மன்னரின் ஆசை

Updated : ஜூலை 08, 2012 | Added : ஜூலை 08, 2012 | |
Advertisement
காத்மாண்டு: நேபாளில் மக்கள் விரும்பினால் மீண்டும் மன்னராட்சி மலர வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு முன்னாள் மன்னர் தெரிவித்துள்ளார். நேபாளில் 239 ஆண்டு கால மன்னராட்சி கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு பிரதமர் தலைமையில் அமைச்சரவை நாட்டினை நிர்வாகித்தது. எனினும் அங்கு தேசிய அரசியலில் கருத்தொற்றுமை ஏற்படாமல் , தொடர்ந்து 4-க்கும்

காத்மாண்டு: நேபாளில் மக்கள் விரும்பினால் மீண்டும் மன்னராட்சி மலர வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு முன்னாள் மன்னர் தெரிவித்துள்ளார். நேபாளில் 239 ஆண்டு கால மன்னராட்சி கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு பிரதமர் தலைமையில் அமைச்சரவை நாட்டினை நிர்வாகித்தது. எனினும் அங்கு தேசிய அரசியலில் கருத்தொற்றுமை ஏற்படாமல் , தொடர்ந்து 4-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்தாண்டு நவம்பரில் பொதுத்தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேபாளின் கடைசி மன்னரான ஞானேந்திரா ஷா , தனது 66-வது பிறந்த நாளை , காத்மாண்டுவில் உள்ள நிர்மல்நிவாஸ், மாளிகையில் கொண்டாடினார். அவரை பல்லாயிரக்கணக்கான மக்கள், அரண்மனை விசுவாசிகள் நேரில் சந்தி்த்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மன்னர் ஞானேந்திரா ஷா கூறுகையி்ல், நாடு தற்போது புதிய அரசியலமைப்பு சட்டத்தினை நிறைவேற்றமுடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. நேபாளில் மாற்றம் வேண்டும் என விரும்பிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. எனவே மக்கள் விரும்பினால் நேபாளில் மீண்டும் மன்னராட்சி மலரும். அதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X