சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகாலில் காதல் ஜோடிகள் போலீசாரால் சிறைபிடிப்பு

Added : ஜூலை 30, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலில், தூண் மறைவுகளில் "பதுங்கிய' காதல் ஜோடிகளை போலீசார் சில மணி நேரம் சிறைபிடித்து, எச்சரித்து அனுப்பினர்.மகாலுக்கு சுற்றுலா பயணிகளை விட, காதல் ஜோடிகள் வருகைதான் அதிகமாக உள்ளது. "கடலை' போட்டுக் கொண்டே மகாலை சுற்றிபார்க்கும் ஜோடிகள், பல மணி நேரம் தூண்கள் மறைவில் "பதுங்குவதை' வழக்கமாக கொண்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல், தாங்கள்

மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலில், தூண் மறைவுகளில் "பதுங்கிய' காதல் ஜோடிகளை போலீசார் சில மணி நேரம் சிறைபிடித்து, எச்சரித்து அனுப்பினர்.மகாலுக்கு சுற்றுலா பயணிகளை விட, காதல் ஜோடிகள் வருகைதான் அதிகமாக உள்ளது. "கடலை' போட்டுக் கொண்டே மகாலை சுற்றிபார்க்கும் ஜோடிகள், பல மணி நேரம் தூண்கள் மறைவில் "பதுங்குவதை' வழக்கமாக கொண்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல், தாங்கள் வந்ததற்கு சாட்சியாக தூண்களில் கிறுக்கின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, நேற்று மகாலில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரு காதல் ஜோடிகள் சிக்கின. கல்லூரிக்கு "கட்' அடித்துவிட்டு, மகாலில் "பாடம்' படிக்க வந்தது தெரியவந்தது. அவர்களை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, மகாலில் போலீசார் சிறை வைத்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறினர். "பெற்றோருக்கு தெரியாது. மன்னித்துவிடுங்கள். இனி இந்த பக்கமே வரமாட்டோம்' என்று இரு மாணவியரும் அழுதனர். அவர்களின் எதிர்காலம் கருதி, "இனி இதுபோன்று நடக்கக்கூடாது' என எச்சரித்து, ஜோடியாக அனுப்பாமல் தனித்தனியே அனுப்பி வைத்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaraku - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-201008:05:58 IST Report Abuse
kumaraku very good ,i appriciate the police and dinamalar.lover's spoiling our histrocal place.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X