ஆபாச நடனம்: 16 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச நடனம்: 16 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 30, 2010
Share
கள்ளக்குறிச்சி:திருவிழாவில் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய் ததாக 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தலில் நேற்று முன்தினம் அய்யனாரப்பன் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அன்று இரவு போலீஸ் அனுமதியின்றி சினிமா பாடல்களுக்கு இளம்பெண்களின் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்

கள்ளக்குறிச்சி:திருவிழாவில் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய் ததாக 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தலில் நேற்று முன்தினம் அய்யனாரப்பன் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அன்று இரவு போலீஸ் அனுமதியின்றி சினிமா பாடல்களுக்கு இளம்பெண்களின் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் தலைமையில் சென்ற போலீசார் ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.இது குறித்து குதிரைச்சந்தலை சேர்ந்த பழனிவேல், ஊராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் பெரியசாமி, முன்னாள் தலைவர் கந்தசாமி மற்றும் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X