சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளைந்த கால்களை அறுவை சிகிச்சை மூலம் நேராக்கி அரசு மருத்துவமனை சாதனை

Added : ஜூலை 30, 2010
Share
Advertisement
கோவை: பலமற்ற எலும்பு வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, நிற்கவும், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்ட ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுவனின் கால்களை அறுவை சிகிச்சை செய்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தினர். ஈரோடு, மொடச்சூரை சேர்ந்தவர் துரைசாமி; கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரசாந்த் (15). பிரசாந்துக்கு பிறவியிலேயே நீலநிறக் கண்களும் "ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பெக்டா'
வளைந்த கால்களை அறுவை சிகிச்சை மூலம் நேராக்கி அரசு மருத்துவமனை சாதனை

கோவை: பலமற்ற எலும்பு வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, நிற்கவும், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்ட ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுவனின் கால்களை அறுவை சிகிச்சை செய்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தினர். ஈரோடு, மொடச்சூரை சேர்ந்தவர் துரைசாமி; கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரசாந்த் (15). பிரசாந்துக்கு பிறவியிலேயே நீலநிறக் கண்களும் "ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பெக்டா' என்ற பலமற்ற எலும்பு உருவாதல் நோயாலும் பாதிக்கப்பட்டு, தொடை எலும்புகள் வளைந்து தவளை கால்கள் போன்ற தோற்றத்துடன், நிற்கவும், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தான். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரசாந் துக்கு, இத்துறை டாக்டர்கள் தொடை எலும்புகளில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் தண்டபாணி கூறியதாவது: "ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பெக்டா' என்ற நோய் பிறவியிலேயே ஏற்படும் எலும்பு குறைபாடு நோய். இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, எலும்பு எளிதில் உடைந்து விடும். கண்விழித்திரைகள் நீல நிறமாகவும், அதிகமான அளவு வளையும் எலும்புகளும் காணப்படும். லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்நோய் ஏற்படும். இந்நோய் உள்ள சில குழந்தைகள் பிறக்கும் போதே எலும்பு முறிவுடன் பிறக்கும். சில குழந்தைகளுக்கு பிறந்த பின் அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படும். மண்டை ஓடு சன்னமாகவும், உருண்டை வடிலும் காணப்படும். சில குழந்தைகள் 10 முதல் 15 வயது வரை இயல்பாக இருப்பர். அதன்பின் லேசாக அடிபட்டால் கூட எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவர். இந்நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு எலும்பு வலுவாக இல்லாததால், நடக்க துவங்கியவுடன் கால் எலும்புகள் வளைந்து நடக்க சிரமப்படுவர். சிலருக்கு காது கேளாமை, குள்ளமாக இருத்தல், அகன்ற மண்டை ஓடு, வலுவில்லாத பற்கள் உள்ளிட்ட பிரச்னைகள் காணப்படும். இந்நோய் காணப்படும் குழந்தைகளுக்கு எலும்பு வளைவு ஏற்பட்டால், எலும்புகளை பல துண்டுகளாக வெட்டி அதை நேர் செய்து எலும்புக்குள் கம்பி வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தற்போது ஈரோட்டை சேர்ந்த 15 வயதான பிரசாந்துக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சை, இரு கால்களுக்கும் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின் பிரசாந்தின் கால்கள் சரிசெய்யப்பட்டன; இரு கால்களாலும் நிற்கிறார். இவ்வாறு, டாக்டர் தண்டபாணி தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X