சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உல்லாச வாழ்க்கை வாழ கொள்ளையடித்த சிறுவன் கைது

Updated : ஆக 01, 2010 | Added : ஜூலை 30, 2010 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : கடந்த இரண்டு ஆண்டுகளாக திருட்டு, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சிறுவன் போலீசாரிடம் சிக்கினான். மாதவரம், தபால் பெட்டி கண்ணப்புரம் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சூரி(16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறு வயதில் பெற்றோரை இழந்த இவன், பாட்டி வீட்டில் வளர்ந்தான். போதிய பராமரிப்பில்லாத காரணத்தால் கடந்த 2007ம் ஆண்டு முதல் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டான். முதல் முதலில்

சென்னை : கடந்த இரண்டு ஆண்டுகளாக திருட்டு, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சிறுவன் போலீசாரிடம் சிக்கினான்.


மாதவரம், தபால் பெட்டி கண்ணப்புரம் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சூரி(16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறு வயதில் பெற்றோரை இழந்த இவன், பாட்டி வீட்டில் வளர்ந்தான். போதிய பராமரிப்பில்லாத காரணத்தால் கடந்த 2007ம் ஆண்டு முதல் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டான். முதல் முதலில் மாதவரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ஆயிரம் ரூபாய் திருடி, போலீசாரிடம் சிக்கியதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். ஆறு மாதத்திற்கு பின் விடுதலையானான். அதன் பின் காற்று வசதிக்காக திறந்திருக்கும் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் கைவரிசை காட்டி வந்தான். கொடுங்கையூர் அம்பேத்கர் நகர், நேரு நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு கிடைக்கும் பணத்தில், லாட்ஜிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினான். போதை பழக்கங்களுக்கும் அடிமையாகி, உல்லாச வாழ்க்கையை அனுபவித்தான். பணம் இல்லாவிட்டால் கோவில் வளாகம், திருமண மண்டபம், மூடி கிடக்கும் கடை மற்றும் வீடுகளின் அருகில் தங்கி விடுவான். இந்நிலையில், நேற்று முன்தினம் கொடுங்கையூர் போலீசாரிடம் சிக்கினான். அவர்கள் விசாரித்தனர். இதில் மேற்கண்ட விவரங்கள் தெரிந்தன.


Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thisu - toronto,கனடா
01-ஆக-201000:13:51 IST Report Abuse
thisu தம்பி வா தலைமை ஏற்கவா. எதிர் காலம் உன் கையில்.
Rate this:
Cancel
சேகர் - Erode,இந்தியா
31-ஜூலை-201021:51:08 IST Report Abuse
சேகர் தம்பி ஒரு நாள் சம் a வருவார் or கோரஞ்சபச்சம் MLA ஆவார் பாருங்க என் ஆருயிர் தமிழ் குடிமக்களே, இது நாம் அரசியல்வாதிகள் மேல் ஆணை.
Rate this:
Cancel
kanthasami - egypt,எகிப்து
31-ஜூலை-201020:09:01 IST Report Abuse
kanthasami siruvar seer thuratha palli la actuvala sinna thurudana paria thurudana mathurathu pola
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X