அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., "மாஜி'க்கு சிக்கல்?நில அபகரிப்பு புகாரில் இரு ஓட்டுனர் கைது

Updated : ஜூலை 29, 2012 | Added : ஜூலை 27, 2012 | கருத்துகள் (27)
Advertisement
 தி.மு.க., "மாஜி'க்கு சிக்கல்?நில அபகரிப்பு புகாரில் இரு ஓட்டுனர் கைது,Problem once again arise for ex dmk minister

திருச்சி:திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்காக, நிலத்தை அபகரித்த வழக்கில், தி.மு.க., முன்னாள் துணைமேயர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகியோரின் கார் ஓட்டுனர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், தி.மு.க., ஆட்சியில், திருச்சி மாவட்ட, தி.மு.க., தலைமையகமான கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

நிலஅபகரிப்பு புகார்:
அ.தி.மு.க., ஆட்சி மாறிய சில மாதங்களில், "முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன், குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி, தன் நிலத்தை அபகரித்து, கலைஞர் அறிவாலயம் கட்டினர்' என, சீனிவாசன், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.அதையடுத்து, நிலஅபகரிப்பு மீட்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தி.மு.க., "மாஜி' அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், அன்பழகன், குடமுருட்டி சேகர் ஆகியோரை கைது செய்து, பல்வேறு சிறைகளில் அடைத்தனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, நேரு உள்ளிட்டோர் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அதன்பின்னர், இவ்வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது.

ஓட்டுனர்கள் கைது:
நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய, தி.மு.க., முன்னாள் துணைமேயர் அன்பழகன் கார் ஓட்டுனர் துளசி மற்றும் மாவட்ட துணைச்செயலர் குடமுருட்டி சேகரின் கார் ஓட்டுனர் விஸ்வநாதன் ஆகியோரை, நில அபகரிப்பு மீட்புப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் நீதிபதி ராஜாராம், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவரும் திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

"மாஜி'க்கு சிக்கல்:
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், திருச்சி, தி.மு.க.,முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், "ஆட்டம்' போட்ட நிர்வாகிகள் காஜாமலை விஜய், குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த நேரு, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று வெளியே வந்தார்.இந்நிலையில், அவரது தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பின், நேரு மீது புதிய வழக்குகள் தொடரப்படவில்லை. இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் தற்போது, தி.மு.க., நிர்வாகிகளின் ஓட்டுனர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேருவுக்கு சிக்கல் ஆரம்பமாகியுள்ளதாக, திருச்சி தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-201213:53:04 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. அறிவுகெட்டவனுங்க,ராமஜயத்தை மட்டும் போட்டுவிட்டு போய் விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
28-ஜூலை-201211:50:02 IST Report Abuse
maha மரியா அவர்கள் சார்பாக ."" இது ஊக அடிப்படையில் ஆன வழக்கு . கலைஞர் அறிவாலயம கட்டப்பட்டுள்ள இடத்தில் அதற்கு முன், எந்த நிலமும் இருந்ததில்லை. ஏற்கனவே அங்கு நிலம் இருந்ததாக, யாரோ யூகத்தின் , அடிப்படையில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் பழி வாங்கும் நோக்கில் செயல் படுகின் றனர் ."""""""""""""
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393