பொது செய்தி

இந்தியா

புது பார்லிமென்ட் கட்டடம் எப்போது வரும்? மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

Added : ஜூலை 31, 2012 | கருத்துகள் (10)
Advertisement
புது பார்லிமென்ட் கட்டடம் எப்போது வரும்? மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடில்லி: தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்திற்குப் பதிலாக, புதிய பார்லிமென்ட் கட்டப்படுவது தொடர்பான திட்டம், பெரிய அளவிலான ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி செய்யப்படலாம் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கட்டடம், நீண்ட காலம் பயன்பாட்டில் உள்ளதால், ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. அதனால், தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்திற்குப் பதிலாக, புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவது தொடர்பான, பிரமாண்ட திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இதுதொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இருந்தாலும், பிரதமர் அலுவலகமும், ஒட்டு மொத்த மத்திய அமைச்சரவையும், முழு ஒப்புதல் அளித்த பின்னரே, இந்தத் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கப்படும். பெரிய அளவிலான ஆலோசனைகளுக்குப் பிறகே திட்டம் இறுதி செய்யப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.


இதுதொடர்பாக லோக்சபா செகரட்டரி ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் கூறியதாவது:


வலியுறுத்தல்: பார்லிமென்ட் கட்டடம் பாரம்பரியமிக்கது. 85 ஆண்டு பழமையான இந்த கட்டடம், அதன் பயன்பாட்டு கால அளவைத் தாண்டி, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக, மத்திய பொதுப்பணித் துறையினர் கூறி வருகின்றனர். அதனால், பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகத்தில், ரிப்பேர் மற்றும் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இரண்டு ஆண்டு காலம் பார்லிமென்ட் கட்டடம் காலியாக இருக்க வேண்டும். அப்போதுதான், தங்களால் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறி வருகின்றனர். பார்லிமென்ட் கட்டடம், அதன் பழைய பொலிவைப் பெற வேண்டும் எனில், இதைச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.


உயர் அதிகார கமிட்டி: அதனால், புதிய பார்லிமென்ட் கட்டடம் மற்றும் தற்போதைய பார்லிமென்ட் கட்டடத்தை சீரமைப்பது குறித்து, ஆய்வு செய்ய, உயர் அதிகார கமிட்டி ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இதன்பின், ராஜ்யசபா தலைவருடன் கலந்து ஆலோசித்து, இந்த உயர் அதிகார கமிட்டியை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் நியமிப்பார். இந்த உயர் அதிகார கமிட்டியில், பார்லிமென்ட் விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக இடம் பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


சமாளிக்குமா? இந்த உயர் அதிகார கமிட்டிதான், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டுமா அல்லது தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடமே, எதிர்கால தேவையை சமாளிக்கும் வகையில் இருக்குமா என்பதை முடிவு செய்வர். மேலும், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவது எனில், எந்த இடத்தில் கட்டுவது, எந்த அளவில் கட்டுவது போன்றவற்றையும் அவர்களே முடிவு செய்வர். புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவது அவசியம் என, உயர் அதிகார கமிட்டி முடிவு செய்தால், தற்போதைய கட்டடம் நன்கு பராமரிக்கப்படும் மற்றும் விழாக் காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்.


பெண்கள் மசோதா: மேலும், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவது என, இறுதி முடிவு எடுக்கப்பட்டால், முக்கிய அம்சமான எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கட்டப்படும். தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் கிட்டத்தட்ட 800 உறுப்பினர்கள் வரை உள்ளனர். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் மற்றும் தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறை அமலுக்கு வந்தால், எம்.பி.,க்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதற்கேற்ற வகையிலும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைக்கப்படும். இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-ஆக-201218:08:50 IST Report Abuse
Nallavan Nallavan பழைய கட்டிடத்தில் என்ன கிழித்து விட்டார்கள்?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
01-ஆக-201207:32:01 IST Report Abuse
villupuram jeevithan நம்ம செட் புகழ் ஆர்டிடேக்ட் கருணாவிடம் விட்டு விடுங்கள். பதினாலுக்குள் கட்டாயம் செட்டு போட்டாவது திறப்பு விழா நடத்திடுவார்.
Rate this:
Share this comment
Cancel
01-ஆக-201206:54:27 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் முதலில் அதிலொரு ஜெயில் காட்டுங்கள். சிறையில் தள்ளப்படும் அரசியல்வாதிகள் மற்ற கிரிமினல்கள் விவாதிப்பதை உடனுக்குடன் பார்க்கலாமே
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393