அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசு தவறான பிரசாரம்: கருணாநிதி

Updated : ஆக 10, 2012 | Added : ஆக 08, 2012 | கருத்துகள் (151)
Advertisement

சென்னை: "டெசோ மாõநாடு பற்றி இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கை அரசின் சார்பில், கடந்த, 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையர் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் சார்பில் ஊடகத்துறை அமைச்சர் ஒருவர், "இந்த மாநாட்டில் பங்கேற்போர் மீது, அரசு கவனம் செலுத்தி வருகிறது' என கூறியிருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டுகள். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது.


இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற்காவே இந்த டெசோ மாநாடு நடைபெறுகிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்தத் தவறான பிரசாரத்தை, இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Subramanian - Chennai,இந்தியா
10-ஆக-201208:48:17 IST Report Abuse
R.Subramanian கருணாநிதி இலங்கை பிரச்சனையில் சில தவறுகள் செய்து இருக்கலாம் (உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், ராஜினாமா கடித நாடகம் என்று) அதுக்கு காரணம் தமிழக அரசியல் நிலை தான், இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை, மத்திய அரசும் நேரடியாக இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது, மேலும் சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள் இதில் மூன்றாம் நாடான இந்தியா எங்களுக்குள் நடக்கும் சண்டையில் தலையிட கூடாது என்று புலிகள் சொல்லியுள்ளனர் (இந்திய அமைதிப்படை காலத்தில்), மேலும் புலிகளுக்கு அமைதியான முறையில் பிரச்சனையை தீர்பதற்கு சந்தர்ப்பங்கள் பல கிடைத்தது ஆனால் அதை குருட்டு தனமான வெறுப்பினால் புலிகள் தவற விட்டனர். ஐக்கிய நாடு சபை, போர் சமயத்தில், புலிகளை போரை நிப்பாட்டிவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரும்படி பல முறை சொல்லியும் புலிகள் கேட்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இந்திய எதிர்ப்பை கடைப்பிடித்து வரும் புலிகள் போரில் தோர்ப்போம் என்று தெரிந்தவுடன் இந்தியா உதவ வேண்டும் தொப்புள் கோடி உறவு அது இது என்று சொன்னால் எப்படி உதவுவார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதியை கொன்று விட்டு அந்த நாட்டின் உதவியை யாரவுது வாங்க முடியும்மா, ராஜீவ் காந்தியை இறக்கம் இல்லாமல் கொன்று விட்டு (அவரின் மனைவியிடமே) இந்தியா உதவ வேண்டும் என்று சொல்லுவது எப்படி நியாமாகும், ஐக்கிய நாடு சபை அறிக்கையின் படி புலிகள் போர் களத்தில் சொந்த மக்களை கேடயமாக பயன்டுத்தி கொன்று உள்ளனர் ஆனால் கருணாநிதியை இவ்வுளவு விமர்சிப்பவர்கள் புலிகளின் இந்த பாவத்தை யாரவுது ஒரு ஆள் விமர்சனம் செய்து இருக்கிறிர்களா ? கேட்டால் இதை ஐக்கிய நாடு சபையின் பொய் குற்றச்சாட்டு என்பிர்கள் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, தீவிரவாதிகளின் பொய்களை நம்புவிர்கள் ஆனால் ஜனநாயக நாட்டின் ஒரு மூத்த அரசியல் தலைவரை அவரின் கடைசி காலத்தில் முடிந்த அளவு அவதுறு பரப்பி அவரை வேடனை படுத்துவிர்கள். தமிழ் இனம் இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பது நன்றகவே தெரிகிறது இதன் பாதிப்பு பல தலைமுறையை அழித்து விடும்... இன்றைய நிலையில் ஆக்கபுர்வமான சிந்தனைகளும் இலங்கை பிரச்சினைக்கு அறிவு பூர்வமான யோசனைகள் தான் வேண்டும் இலங்கை தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி போன்றவைகளை எப்படி மேம்படுத்துவது என்ற சிந்தனை வேண்டும் ஆனால் இப்போது நடப்பது மீண்டும் எப்படி போரை ஆரம்பிக்கலாம் என்ற தீய சிந்தனைகள் தான்.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393