காசியாபாத்: பாபா ராம்தேவ் கேட்டுக் கொண்டால் கறுப்பு பணத்துக்கு எதிரான அவரது பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. முழுவீச்சில் ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காசியாபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: அன்னா ஹசாரே மற்றும் ராம்தேவ்வின் பிரச்சாரங்களுக்கு முன்பு பா.ஐ.க. தார்மீக அடிப்படையில் ஆதரவு வழங்கி வந்தது. தற்போது ராம்தேவ் கேட்டுக் கொண்டால் அவருக்காக முழுவீச்சில் பிரச்சாரம் மேற்கொள்ள தயாராக உள்ளோம். கறுப்பு பணம் போன்ற சமூக விரோத செயல்களை அனைவரும் எதிர்த்து போராட வேண்டும். 2014 பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக <உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.