புதுடில்லி: ""கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற, என் கோரிக்கையை அரசு நிறைவேற்றா விட்டால், மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். இதுபற்றிய முக்கிய அறிவிப்பை, நாளை (இன்று) வெளியிடுவேன்,'' என, பாபா ராம்தேவ் கூறினார்.
வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும், ஊழலுக்கு எதிராக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும், யோகா குரு பாபா ராம்தேவ், கடந்த 9ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, அவர் பேசியதாவது:வெளியிடுவேன்என்னுடைய கோரிக்கைக்கு உரிய பதிலை, மத்திய அரசிடம் இருந்து பெறும் வரை, இங்கிருந்து வெளியேறப் போவது இல்லை. கோரிக்கையை நிறைவேற்றா விட்டால், மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும். நாட்டின் வளங்களை கொள்ளையடித்த, ஊழல்வாதிகளின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவேன்.கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, 1.25 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களிடமும், 225 எம்.பி.,க்களிடமும், ஆதரவு கடிதம் பெற்றுள்ளேன். இந்த கடிதங்களுடன், ஜனாதிபதியிடம் சென்று, புகார் அளிப்பேன். ஏராளமான காங்., எம்.பி.,க்கள், எங்களின் போராட்டத்துக்கு, மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சி மேலிடத்தின் நடவடிக்கைக்கு பயந்து, ஆதரவு கடிதம் கொடுக்க, தயங்குகின்றனர். ஊழல் கறைபடியாதவர்தான், நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அப்போது தான், நாட்டின் மதிப்பு உயரும்.
புரட்சிநாட்டில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான முக்கியமான அறிவிப்பை, நாளை (இன்று) வெளியிடுவேன். நாளைக்கு பல முக்கிய விஷயங்கள் நடக்கப் போகின்றன. ராம்லீலா மைதானத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும், பல முக்கிய விஷயங்கள் நடக்கப் போகின்றன. இந்த போராட்டத்தில், முக்கிய திருப்புமுனை ஏற்படும். இளைஞர்கள், இந்த போராட்டத்தில் பங் கேற்க போகின்றனர்.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.இதற்கிடையே, "போராட்டம் தொடர்பான செய்திகளை சரியாக வெளியிடவில்லை' என கூறி, ராம்தேவ் ஆதரவாளர்கள், மீடியாக்காரர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உண்ணாவிரதப் பந்தலில் நேற்று, சர்ச்சை எழுந்தது.ராம்தேவ், முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியுள்ள நிலையில், ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங்கும், இன்றைய போராட்டத்தில் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டில்லியில் பலத்த மழை பெய்ததால், உண்ணாவிரதம் நடந்த இடத்தில், பெண்கள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த கூடாரம் சரிந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE