வேன் ஓட்டுனர் உடல் உறுப்புகள் தானம்

Added : ஆக 14, 2012 | |
Advertisement
திருப்போரூர் : கேளம்பாக்கம் அருகே விபத்தில் சிக்கி, மூளைச் சாவு ஏற்பட்ட, வேன் ஓட்டுனரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சென்னை திருமங்கலம், என்.வி.என்.,நகரைச் சேர்ந்தவர் அப்பன்னராஜ். இவரது மகன் ஜீவா,31. வேன் ஓட்டுனர். இவர் கடந்த 11ம் தேதி திருமண பிரார்த்தனைக்காக, மொபட்டில் திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு,

திருப்போரூர் : கேளம்பாக்கம் அருகே விபத்தில் சிக்கி, மூளைச் சாவு ஏற்பட்ட, வேன் ஓட்டுனரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சென்னை திருமங்கலம், என்.வி.என்.,நகரைச் சேர்ந்தவர் அப்பன்னராஜ். இவரது மகன் ஜீவா,31. வேன் ஓட்டுனர். இவர் கடந்த 11ம் தேதி திருமண பிரார்த்தனைக்காக, மொபட்டில் திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, பகல் 1.00 மணிக்கு சென்னை புறப்பட்டார். கோவளம் அருகே சென்றபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற, தனியார் ஆம்புலன்ஸ் வேன், அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்தவரை, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதை அறிந்த அவரது பெற்றோர். அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதைத் தொடர்ந்து, அவரது கண்கள், சிறுநீரகம், போன்றவை அகற்றப்பட்டு, பிறருக்கு பொருத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X