கொக்கரக்கோ சத்தம் கேட்கணும் - தேவா இசையமைப்பாளர்

Added : ஆக 22, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement
மயிலாப்பூர்ல இருக்குற விசாலாட்சி தோட்டத்துல தான் பிறந்து வளர்ந்தேன். சரஸ்வதி குடியிருக்கும் இடம். அங்குள்ள சாமானியர்களுக்கு கூட இசை ஞானம் இருக்கும். வெளிநாடுகளுக்கெல்லாம் போய் கச்சேரி செய்வாங்க. விசாலாட்சி தோட்டத்துல குடி கொண்டிருக்கும் எங்க குலதெய்வம் துலுக்காணத்தம்மாவோட அருளால எனக்கும், என் தம்பிகளுக்கும் இசைஞானம் வந்தது. ஆரம்பத்துல கோயில் கொடை சமயத்துல இசை
கொக்கரக்கோ சத்தம் கேட்கணும் - தேவா இசையமைப்பாளர்

மயிலாப்பூர்ல இருக்குற விசாலாட்சி தோட்டத்துல தான் பிறந்து வளர்ந்தேன். சரஸ்வதி குடியிருக்கும் இடம். அங்குள்ள சாமானியர்களுக்கு கூட இசை ஞானம் இருக்கும். வெளிநாடுகளுக்கெல்லாம் போய் கச்சேரி செய்வாங்க. விசாலாட்சி தோட்டத்துல குடி கொண்டிருக்கும் எங்க குலதெய்வம் துலுக்காணத்தம்மாவோட அருளால எனக்கும், என் தம்பிகளுக்கும் இசைஞானம் வந்தது.

ஆரம்பத்துல கோயில் கொடை சமயத்துல இசை நிகழ்ச்சி செஞ்சிட்டு இருந்தோம். பிறகு சினிமா "சான்ஸ்' வந்துச்சு. நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம், டுமீல் குப்பம் பகுதிகள்ல தான் சுத்திக்கிட்டிருப்பேன். அங்கு நண்பர்களோடு சேர்ந்து கானாபாட்டு பாடி திரிஞ்ச காலம் இன்னமும் பசுமையா இருக்கு. சினிமாவுல கானா பாட்டுல நான் முத்திரை பதிக்க காரணமே அந்த குப்பத்து நண்பர்களின் நட்பு தான்.


எங்களோட இசை கச்சேரி மயிலாப்பூர்லயும், அதை சுத்தியுள்ள இடங்களிலும் தான் அதிகமா நடக்கும். கச்சேரி முடிஞ்சதும் காளத்தி கடை ரோஸ் மில்க்கும், கற்பகாம்பாள் மெஸ் காபியும் சாப்பிட்டாத்தான் திருப்தியே வரும். இப்ப சென்னை நகரம் ரொம்பவும் மாறிப் போச்சு. செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட்னு எவ்வளவோ "ஹைடெக்' சிட்டியாகிடுச்சு."கொக்கரக்கோ' சத்தம்:

ஆனா, கூவம் ஆத்துல படகு போனது, ஆடி மாசத்துல வரும் மணி ஆட்டி, அதிகாலையில கேட்கும் "கொக்கரக்கோ' சத்தம், அறுபத்து மூவர் திருவிழாவுக்கு வரும் சீனி மிட்டாய்க்காரன், வாண வேடிக்கை இதெல்லாம் தான் என் மனசுக்குள்ள பசுமையா தங்கியிருக்கு.


மயிலாப்பூர்ல எவ்வளவோ மாற்றம் வந்தாலும் காளத்தி கடை ரோஸ் மில்க்கோ, கற்பகாம்பாள் மெஸ் காபியோ இன்னும் மாறல. ஆனா, கூவத்துல படகு போனதும், "கொக்கரக்கோ' சத்தமும் தான் மாறிப் போச்சு. அந்த "கொக்கரக்கோ' சத்தம் மறுபடியும் கேட்காதான்னு ஏக்கமா இருக்கு.


சுனாமி, புயல்னு அவ்வப்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் சென்னை நகரத்துக்கு மட்டும் எந்த சேதாரமும் ஆகாது. ஏன்னா, கடற்கரையோரம் உள்ள தெய்வங்கள் காவல் தெய்வமா இருந்து சென்னை நகரத்தை பாதுகாத்திட்டு இருக்காங்க.


பழைய சென்னையை பார்த்து வளர்ந்து அதன் அற்புதங்கள் அனுபவிச்ச புண்ணியவான் நான். சென்னையில பிறந்ததை பாக்கியமா நினைக்கிறேன். சினிமாவுக்கு வந்து புகழ் பெற்றாலும் இப்பவும் என்னாட குப்பத்து நண்பர்களையும், விசாலாட்சி தோட்டத்துல இருக்கும் சொந்த பந்தங்களையும் பாக்கறத வழக்கமா வச்சிருக்கேன். அங்க போன பிறகுதான் நான் இன்னும் இளமையா இருக்கிறதா உணர்றேன்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gowri shankar - bangalore,இந்தியா
26-செப்-201217:56:56 IST Report Abuse
gowri shankar ஐ ஆம் மிஸ்ஸிங் சென்னை. என்னதான் வெயில் கொளுத்தி எடுத்தாலும் அந்த அற்புதமான சென்னை வாழ்க்கை இனிமே எப்பவுமே வராது. பிரண்ட்ஸ் கூட பீச் கறைல, பாத்ததுல தண்ணி பட பல கிலோமீட்டர் நடந்துகிட்டே கத பேசிகிட்டு போனது, முருகன் இட்லி கடை, மீனாச்சி பவன், வசந்த பவன், சரவணா பவன், கையேந்தி பவன், ஆனந்த பவன், ரத்னா கபே, ஆந்திரா மெஸ், புரோட்டா கட ( இப்பத்தான் நானே யோசிக்கிறேன், எத்தன எத்தன உணவகங்கள்? ஆத்தாடி லிஸ்ட் போயிகிட்டே இருக்கே ) இன்னும் எத்தனையோ ஹோடல்கள்ள நண்பர்களோட கதயடிச்சிகிட்டே சாப்பிட்டது, படம் பாத்தது, ஆபிசுக்கு நடந்தே போனது, நடந்தே வந்தது, டி-நகருல எல்லா கடையும் ஏறி இறங்குனது, FM ரேடியோ ரசிச்சு ரசிச்சு கேட்டது... ஹ்ம்ம், இனிமே எவ்வளவு கோடி குடுத்தாலும் திரும்ப வராது. ஐ லவ் யு சென்னை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X