அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி

Added : ஆக 27, 2012 | |
Advertisement
பேரூர்:தொண்டாமுத்தூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் குழந்தைவேலு வரவேற்றார்.ஒன்றிய தலைவர் மதுமதி, பேரூராட்சி தலைவர் ரவி, புனிதன் முன்னிலை வகித்தனர். இதில், எம்.எல்.ஏ., வேலுமணி தலைமை

பேரூர்:தொண்டாமுத்தூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் குழந்தைவேலு வரவேற்றார்.ஒன்றிய தலைவர் மதுமதி, பேரூராட்சி தலைவர் ரவி, புனிதன் முன்னிலை வகித்தனர். இதில், எம்.எல்.ஏ., வேலுமணி தலைமை வகித்து பேசுகையில்,"" கல்வி மேம்பாட்டுக்காக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி கல்வியில், மாணவர்கள் நன்கு சாதிக்க வேண்டும்,''என்றார்.

தொண்டாமுத் தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 166 பேர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 176 பேருக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கினார். இதேபோல், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 86 பேர், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 189 பேர் என, மொத்தம் 617 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. தொண்டாமுத்தூர் பெண்கள் அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோதை நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X