தேசிய தடகள போட்டியில் வெற்றிகுன்னூர் பள்ளி மாணவருக்கு பாராட்டு| DISTRICT NEWS | Dinamalar

தேசிய தடகள போட்டியில் வெற்றிகுன்னூர் பள்ளி மாணவருக்கு பாராட்டு

Added : ஆக 27, 2012 | |
குன்னூர்:தேசிய தடகள போட்டியில் குன்னூர் மாணவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்,இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தேசிய தடகள போட்டிகள் கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் கேரள மாநிலம் கொச்சினில் நடந்தது. இதில் தமிழகம் அணியில் குன்னூர் மவுன்டன் ஹோம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அசாருதீன் கலந்து கொண்டார்.இதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயத்தில்

குன்னூர்:தேசிய தடகள போட்டியில் குன்னூர் மாணவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்,இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தேசிய தடகள போட்டிகள் கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் கேரள மாநிலம் கொச்சினில் நடந்தது. இதில் தமிழகம் அணியில் குன்னூர் மவுன்டன் ஹோம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அசாருதீன் கலந்து கொண்டார்.இதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இவர், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.கடந்தாண்டு தர்மபுரியில் நடந்த தேசிய தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசாருதீன் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடதக்கது. இவருக்கு அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X