நாமக்கல்: அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட மின்னணு நூலகத்தை, வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம், தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், மின்னணு நூலகம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. சென்னையில் இருந்து, வீடியோ கான்ஃபரன்ஸஇங் மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நூலகத்தை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரேவதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE